If you are searching for Tenali Raman Stories in Tamil then you are at the right place Here I’m sharing with you the top 5 Tenali Raman Stories in Tamil which is really amazing and interesting. I’m sure you will love it.
சந்நியாசியிடம் உபதேசம் பெறுதல் – Tenali Raman Stories in Tamil
ஆந்திர மாநிலத்தில் பச்சை பசேல் என்ற கிராமம் அது. சூது, வாது தெரியாத மக் கள் நிறைந்த ஊர். அதன் பெயர் தான் “தெனாலி”.
அங்கு தான் பிறந்தான் “ராம கிருஷ்ணடு”. எனினும் அந்த ஊர் மக் கள் அவனை “ராமன்” என்றே அழைத்து வந்தனர். “ராமன்” தெனாலியில் பிறந்த காரணத்தால் அவன் “தெனாலிராமன்” ஆனான்.
தெனாலிராமன் ஒரு ஏழை அந் தக் குடும்பத்தில் பிறந்தவன். அறிவும், செல்வமும் ஒரே இடத்தில் இருப்பது அரிது. அதனால் தானோ என்னமோ!…
தெனாலி ராமன் சிறு வயதில் இருந்தே நல்ல புத்தி கூர்மையுடன் இருந்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்தான் ‘ராமன்’.
வறுமை அவனை வளர்த்தெடுத் தது. தாயின் கஷ்டத்தை பார்த்து, பார்த்து வளர்ந்தான் ராமன். தனக்குள் இருக் கும் சோகத்தை மறைத்துக் கொள்ள ராமன் சிறு வயதில் இருந்தே சிரிக்க,
சிரிக்க பேசுவான். எப்போதும் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து வந்தது. அந்த ஊரில் எங்கெல்லாம் மக்கள் கூடி கொல்லென்று சிரிக்கிறார்களோ அங் கெல்லாம் தெனாலி ராமன் இருப்பான்.
வயது ஆக, ஆக நெடு- நெடு என வளர்ந்து இளைஞன் ஆனான் தெனாலி ராமன். ஆனால், நல்ல அறிவு இருந்தும் அவனுக்கு நல்ல வேலை இல்லை. எந் தப் பிழைப்பும் கிடைக்கவில்லை.
அப்போது அந்த ஊருக்கு ஒரு சந் நியாசி வந்திருந்தார். நெற்றி நிறைய வீபூதிப் பட்டை. கழுத்தில் ருத்திராட் சக் கொட்டை. ஜடா முடியுடன் கையில் தண்டும், கமண்டலமும் கொண்டு மிகப் பெரும் ஞானியை விளங்கினார்.
“பரம சிவன் தான் இப்படி வந்து விட் டானோ! என்று மக்கள் அவரைக் கண்ட மாத்திரத்தில் பேசிக் கொண்டனர்.
அதற்கு ஏற்றபடியே அந்தப் புண்ணிய ஆத்மா அவ்வூருக்கு வந்த மாத்திரத்தில் இருந்து நல்ல மழை கொட்டு, கொட்டு என்று கொட்டத் தொடங்கிவிட்டது.
“அந்த வருடம் பருவ மழை பொய்த்து விடுமோ!” என்று எண்ணிய மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தச் சந்நியாசியை போற்றினர், புகழ்ந்தனர்.
அவரை நன்கு உபசரித்தனர். அவரவர் அந்தச் சந்நி யாசியை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர். சிலர் பழங்களைக் கொண்டு வந்து அவருக்கு கொடுத்து அவரை உப சரித்தனர்.
தெனாலி ராமன் அந்த சந்நியாசி யைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவரைக் காண வேண்டும் என்ற விருப்பம் அவ னுக்குள் ஏனோ வந்தது.
ஒரு நாள் அந்த சந்நியாசியை சந்திக்கும் பாக்கியம் தெனாலி ராமனுக்கு கிட்டியது. அப்போது அந்த சந்நியாசி, மக்கள் கேட் டுக் கொண்டதன் பெயரில் ராமாயண கதை சொல்லிக் கொண்டு இருந்தார்.
“இராவணனுக்கு பத்து தலை” என்று சொல்லிக் கொண்டு இருந்த மாத்திரத் தில் “கொல்!” என்று ஒரு சிரிப்புச் சத்தம். சந்நியாசி சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்க அங்கு தெனாலி ராமன் இருந் தான்.
“ஏன் அப்பா சிரிக்கிறாய்!” என்று கேட் டார் சந்நியாசி. “ராவணனுக்கு பத்து தலை” என்று சொன்னீர்களே! அதைக் கேட்டு சிரித் தேன் என்றான் தெனாலி ராமன்.
“இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என் றார் சந்நியாசி. “இல்லை…ஒரு தலை இருக்கும் போதே உறங்கும் சமயத்தில் புரண்டு படுக்க சில சமயங்களில் கஷ்டமாக உள்ளது.
பத்து தலை கொண்ட இராவணன் எவ்வாறு புரண்டு படுப்பான்? அதை நினைத்து சிரித்தேன்!” என்றான் தெனாலி ராமன்.
சந்நியாசி சில கணங்கள் மௌனமாக இருந்த பின்னர்.”மகனே! அது அப்படி இல்லை. ராவணன் அரக்கன்.
அவன் எப்போது எல்லாம் நினைக்கிறானோ அப்போது மட்டுமே அவனுக்குப் பத்து தலைகள் வரும்!” என்றார்.
பின்னர் அந்த சந்நியாசி ராமாயண கதையை முழுமையாகக் கூறி முடித் தார். சற்று நேரத்தில் கூட்டம் குறைந் தது.
அப்பொழுது அவர் அருகில் சென்றான் தெனாலிராமன். அவரைப் பார்த்து வெடுக்கென்று ‘பழைய பனம் பழம் தானே!’
என்றான். சந்நியாசிக்கு தெனாலி ராமன் கேட்க வருவது புரி யாமல் இல்லை. இருந்தாலும் புரியாதது போல விழித்தார்.
“நீங்கள் விழிப்பதை பார்த்தால் அந் தக் கதை உங்களுக்குத் தெரியாது போல இருக்கிறதே! சரி நானே அந் தக் கதையை உங்களிடம் சொல்கிறான் கேளுங்கள்…”என்றபடி தெனாலி ராமன் தொடர்ந்தான்.
“ஒரு பனை மரத்தின் மீது காகம் ஒன்று உட்கார்கிறது. உடனே அந்த மரத்தில் இருந்து பனம் பழம் ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது.
அதைப் பார்த்த மக்கள்,’அந்தக் காகம் அவ்வாறு உட்கார்ந்த காரணத்தால் தான், அந்தப் பனம் பழம் கீழே விழுந்தது’ என்று பேசிக் கொண்டார்கள்.
ஆனால், உண்மையாகவே அங்கு நடந் தது என்ன என்று தெரியுமா?…அந்தப் பழம் நன்கு பழுத்து, கீழே விழுவ தற்கு தயாராக இருந்தது.
அந்தச் சமயம் பார்த்து காகம் அங்கு போய் உட்கார்ந்து இருக்கிறது! அதே போலத் தான் நீங் கள் இங்கே வந்ததற்கும்,
மழை பொழிந் ததற்கும் முடிச்சுப் போட்டு மக்கள் இங்கு மகிழ்கிறார்கள்! இதனைக் கொண்டு தான், நான் உங்களிடம் ‘பழைய பனம் பழம் தானே! என்று கேட்டேன்” என் றான்.
இதைக் கேட்ட பிறகும் கூட தெனாலி ராமன் மீது அந்த சந்நியாசிக்கு எந் தக் கோபமும் அல்லது வருத்தமும் வர வில்லை. அதை அவர் ஒரு சிறுபிள்ளை யின் பேச்சாகவே பார்த்தார் சந்நியாசி.
அந்த சந்நியாசி தெனாலிராமனை அழைத்து, தனது பக்கத்தில் உட் கார வைத்துக் கொண்டு,”மகனே! நான் சிவ உபாசகன்.
நீ எதிர்காலத்தில் சக்தி உபாசகனாக மாற இருக்கிறாய்…அதன் பொருட்டே என்னை இறைவன் இங்கு அனுப்பி உள்ளான்” என்று கூறியபடி அவனது முதுகை தடவிக் கொடுத்தார்.
தெனாலி ராமன் அந்த சந்நியாசியிடம் ஒரு விதமான ஆறுதலை உணர்ந்தான். அவரைத் தனது தந்தை ஸ்தானத் தில் வைத்துப் பார்க்கத் துவங்கினான்.
மேலும், தான் அவ்வாறு முன்பு குதர்க் கமாக கேட்டதற்கு மன்னிப்பு வேண்டி னான். அத்துடன் தனது நிலைமையை அவரிடம் எடுத்துச் சொல்லி, தான் இனி பயணிக்க வேண்டிய மார்க்கத்தை கேட் டான்.
உடனே அந்த சந்நியாசி,”மகனே அதோ காளி கோயில் தெரிகிறது பார். இன்று இரவே அங்கு செல், மகா காளியை மன தில் இறுத்திக் கொண்டு நான் சொல் லிக் கொடுக்கும் மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவை உச்சரி.
காளி உன் முன் னாள் தோன்றிவிட்டால் பயந்து விடாதே! அவளிடம் உனது வாழ்க்கைக்கான வழியை கேள்.
அவள் பாதம் சரணம் அடை. உனது வாழ்வில் நல்லதே நடக் கும்” என்று கூற…அப்படியே செய்வதாக தெனாலிராமனும் வாக்களித்தான்.
பிறகு அந்த சக்தி வாய்ந்த காளி மந் திரத்தை தெனாலி ராமனின் காதுகளில் உபதேசம் செய்தார் சந்நியாசி.
தெனாலி ராமனும் அதீத பய, பக்தியு டன் அந்த மந்திரத்தை அவனது மனதில் ஏற்றுக் கொண்டான். உடனே அவனை ஆசிர்வாதம் செய்து விட்டு அந்த ஊரை விட்டுப் புறப்பட்டார் சந்நியாசி.
- Top 17+ Moral Stories in Tamil
- Top 17+ Moral Short Stories in Tamil
- Top 21 Motivational Stories in Tamil
காளிதேவியின் பிரசன்னம் – Tenali Raman Stories in Tamil
காளிதேவின் மந்திரம் தெனாலி ராம னின் மனதில் நன்கு பதிந்து விட்டது. குளத்தில் நீராடி நெற்றி நிறைய விபூதி அணிந்து.
அரளி பூவை காட்டில் இருந்து பறித்து காளி தேவியின் கோயில் படி ஏறி உள்ளே சென்றான் தெனாலி ராமன். போனவன் மகா காளி சந்நிதியை பல முறை சுற்றி வந்தான்.
எத்தனை முறை என்று அவனுக்கே தெரியாது. பிறகு காளி தேவிக்கு விளக்கு போட்டான். கற் பூரம் காட்டினான்.
சற்று நேரம் மகா காளி யின் திருமுகவிந்தாரத்தை உற்று நோக் கினான். அதில் தனது மனதை பறிகொ டுத்தான்.
கோரமான முகத்தில் தனது தாயின் தாய்மையை கண்ட தெனாலி ராமன் அகம் மகிழ்ந்தான். குதூகலித் தான். பிறகு மண்டபத்தின் மூலைக்குச் சென்று அமர்ந்தான்.
கண்களை மென்மையாய் மூடினான். மகாகாளியை மனதில் இருத்தி – மந் திரத்தை – அட்சரம் பிசகாமல் ஆயிரத் தெட்டு தடவைகள் ஜபித்தான்.
அந்த சமயத்தில் அவன் தன்னையே மறந்தான். தான் இருக்கும் இடத்தை கூட மறந் தான். முன்பின் பார்த்து அறியாத ஒரு வித அற்புத உலகத்தில் மானசீகமாய் அவன் மனம் சஞ்சரித்துக் கொண்டு இருந்தது.
நேரம் கடந்ததே அவனுக்குத் தெரிய வில்லை. முன்னிரவு வேளை மறைந்து நள்ளிரவு வேளை வந்தது. எங்கும் அமைதி நிறைந்திருந்தது. அந்த அமை திக்கு சலனத்தை ஏற்படுத்தும் வித மாக,”ஜல், ஜல்” என்று இனிமையான சதங்கை ஒலி கேட்டது. மென்மையாய் கண்களைத் திறந்தான்.
அப்போது அவனுக்கு எதிரே ஒரு வித ஒளியும் பரவியது. அந்த அதிச யத்தை அவன் கண்டு கொண்டு இருந்த வேளையில் மகா காளியே அங்கு பிர சன்னம் ஆனாள். எதிரே கோர பற்க ளுடன் செந்நாக்கு கீழே தொங்க ஆயி ரம் முகங்களுடன் நின்றாள் மகா காளி.
சற்று பார்க்கவே பயங்கரமாகத் தான் இருந்தது. ஆனால், தெனாலி ராமனோ காளியை தனது தாய் போல பார்த்தான்.
அதனால் அவனுக்கு சிறிதும் பயம் இல் லாமல் இருந்தது. பின்னர் எழுந்து காளி தேவியை பக்தியுடன் நமஸ்காரம் செய் தான்.
எனினும், ஜென்ம பழக்கம் போகு மா…பக்திப் பரவசத்துடன் இருந்த அவன், ஏனோ கலகலவென சிரித்து விட்டான்.
அவனுடைய தைரியத்தை கண்டு ஒரு கணம் காளியே வியப்புற்றாள். எனினும் தெனாலி ராமனின் சிரிப்பு தேவியை கோபப் படுத்தவே,”என்ன சிரிப்பு அது?”
என்று சற்று கடுமையாகவே கேட்டாள். அது கேட்ட மாத்திரத்தில், சிரிப்பை அடக்கிக் கொண்டு,”ஒன்றும் இல்லை தாயே! ஒரு சிறிய விஷயம்.
னக்கு இருப் பது ஒரே மூக்கு சமயத்தில் ஜலதோ ஷம் பிடித்துவிட்டால் ஒரே தொல்லை யாக இருக்கிறது. அதில் இருந்து ஒழுகும் சளியைத் துடைக்க எனது இரு கரங் களுமே போதவில்லை!
அப்படி இருக்க தங்களுடைய இந்த ஆயிரம் மூக்குகளில் இருந்து சளி ஒழுகினால் எப்படி சமா
ளிப்பீர்கள் என்று எண்ணினேன். உடனே எனக்கு சிரிப்பு வந்து விட்டது” என்றான்.
தெனாலி ராமன் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் மகா காளிக்கே சிரிப்பு வந்து விட்டது. “நீ சரியான விகடகவி” என்று சொல்லி பலமாகச் சிரித்தாள் காளி.
“தாயே ஜெகன்மாதா! என்னை மன் னித்து அருளியதற்கு நன்றி. தாங்கள் மனம் உவந்து அளித்த இந்தப் பட்டம் ஒன்றே போதும் எனக்கு.
‘விகடகவி’ அத னைத் திருப்பிப் படித்தாலும் அதே ‘விக டகவி’ தான் என்ன ஆச்சர்யம்!” என்று தனது தலையை வணங்கி காளியை கண் கலங்க தொழுதான் தெனாலி ராமன்.
அப்போது தேவி அவனை ஆசிர்வதித்து, தன் இரு கரங்களிலும் இரண்டு பொன் கிண்ணங்களை ஏந்தி அவன் எதிரே நீட் டினாள்.
ஆச்சர்யமாகப் பார்த்தான் தெனாலிரா மன், புன்னகைத்தபடி காளி,”மகனே! இதோ இந்தக் கிண்ணத்தில் ஒன்
றில் செல்வம், மற்றொன்றில் கல்வி உனக்கு இதில் எது வேண்டும்? சீக்கிரம் சொல்!…”என்றாள்.
“தாயே! அவைகளின் ருசி ஒன்றும் நான் அறியேனே! நான் எதைச் சொல்வது?” என்று சொல்லி சற்றுத் தயங்கினான் தெனாலிராமன்.
“அப்படியா? எனில் ஒன்று செய்…ஒவ் வொன்றிலும் ஒரு துளி எடுத்து ருசித்துப் பார்” என்றாள் காளி.
“ஆகா!” என்று கூறியபடி பாய்ந்து சென்ற தெனாலி ராமன். தனது இரு கரங்க ளையும் இரு கிண்ணங்களிலும் விட்டு அளைந்தான்.
அத்துடன் அவை ஒவ் வொன்றிலும் ஒரு கையளவு எடுத்து, ஒரே சமயத்தில் அவற்றை தனது வாயில் கொட்டிக் கொண்டான்.
“அடடா என்ன ருசி! என்ன ருசி!…” என் றபடி,”தாயே! எனக்கு இரண்டுமே வேண் டும்!” என்றான்.
தெனாலி ராமன் கூறியதைக் கேட்ட காளி புன்னகைத்தபடி,”அட விஷமக் காரா! போக்கிரி பையா! நான் என்ன சொன்னேன்,
நீ என்ன செய்து விட்டாய்! இப்படி நீ நடந்து கொள்ளலாமா?…சரி!… எல்லாம் விதிப்பயன்! நீ ஒரு பெரிய கவி யாக இருப்பதை விட,
வெறும் விகடகவி யாகவே இருந்து விடு. அத்துடன் தெய் வங்களின் மீது அமோக கவிதைகள் எழுதி, நீ என்ன தான் பெரும் கவியாக விளங்கினாலும், மக்கள் உன்னை “விக டகவி” என்று தான் சொல்வார்கள்.
அப் பெயரே உனக்கு நிலைத்து இருக்கும். நீ எவ்வளவு சம்பாதித்தாலும் அப்பணம் உன்னிடம் தங்காது. நீ அதனை ஏழை களுக்கு உன்னை அறியாமல் தானம் செய்து விடுவாய்!
அத்துடன் நீ விஜய நகர ராஜ்யத்தின் அரண்மையில் சிறந்து விகடகவியாக போற்றப்படுவாய். பார தம் இருக்கும் வரையில் உனது புகழும் இருக்கும்.
எனினும் நான் சொன்னதை மீறி செயல்பட்ட காரணத்தால் அரசன் கோபத்துக்கு ஆளாகி, உனது உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்படும். அந்தச் சம யங்களில் எல்லாம் நான் உனது நாக் கில் வீற்று இருந்து உன்னைக் காப்பாற்
றுவேன். இது நான் உனக்கு அளிக்கும் வரம்” என்று கூறி மறைந்தாள். தெனாலிராமன் காளி சிலை அருகே சென்றான்,
“தாயே! நான் பாக்கியவான்… நான் பாக்கியவான்…இந்த ஏழை மீது இத்தனை கருணையா உனக்கு? பயமு றுத்தும் முகம் ஆனால் குழந்தை மனம் கொண்டவள் நீ தாயே! இனி நீயே எனது இஷ்ட தெய்வம்.
உன்னைத் தவிர எனக்கு வேறு ஏது தெய்வம்? எனினும் மீண்டும் உனது திருவுருவத்தை நான் என்று காண்பேன்?…” என்று கண் கலங் கிய படி மகாகாளியை நமஸ்கரித்தான் தெனாலி ராமன்.
- Best 21 Stories for Kids in Tamil
- Top 20 Positive Thinking Short Stories in Tamil
- Best 21 Bedtime Stories for Kids in Tamil
ராஜ குருவின் தந்திரம் – Tenali Raman Stories in Tamil
காளியை சந்தித்த பாக்கியம் தான் என்று சொல்ல வேண்டும். தெனாலி ராமனுக்கு நல்ல படியாகத் திருமணம் நடந்தேறி யது. அன்பான மனைவி அமைந்தாள்.
அடுத்த ஆண்டிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது தெனாலிராமனுக்கு. காளி தனக்கு வரம் அளித்த விஷயத்தை தெனாலி ராமன் யாரிடமும் சொல் லவில்லை.
மனதிற்குள்ளேயே வைத் துக் கொண்டு இருந்தான். காளியின் ஆணைப்படி விஜய நகரத்து அரண் மனைக்குச் செல்லும் அந்த நல்ல நாளை எதிர்பார்த்து அனுதினமும் காத் துக் கொண்டு இருந்தான். தினம், தினம் காளி கோயிலுக்குச் சென்று தாயை வணங்கி வந்தான்.
‘ஏக்கத்துடன் விஜயநகரம் செல்லும் வாய்ப்பு தனக்கு எப்போது கிடைக்கும்?’ என்று பல நாள் காத்திருந்தான். நாட் களும், மாதங்களும் தான் கடந்தன.
அவன் நினைத்தபடி எதுவுமே நடக்க வில்லை. எனினும், காளியின் வார்த்தை கள் பொய்க்காது என்பதை உறுதியாக நம்பினான்.
அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. விஜய நகரத்து அரண்மையின் ராஜ குரு அந்தச் சமயத்தில் பக்கத்து ஊர் மங்கள கிரிக்கு வந்திருந்தார்.
அவர் பல பட்டங் களைப் பெற்ற படாடோபக்காரர் எங்கு சென்றாலும் பலர் சூழ பல்லக்கில் தான் சென்று வருவார். அவர் உடலில் எப் போதும் பட்டாடைகள் மினுமினுக்கும். பார்க்க கம்பீரமான தோற்றம் உடையவர்.
மங்களகிரி சிவ பெருமானுக்கு தனது வெகு நாள் வேண்டுதலைச் செலுத்த வந்திருந்தார். அவர் அக்கோயிலுக்கு வந்த காரணத்தால் அக்கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருந்தது.
மேலும், அங்கு ஒரு பெரிய யாகமும் சுவாமிக்கு விஷேஷ ஊர்வலமும் ராஜ குருவின் கைங்கர்யத்
தில் படு ஜோராக நடந்து கொண்டு இருந்தது. ராஜகுரு வந்த விஷயம் தெனாலி ராமன் காதுகளை எட்டியது. உடனே மங்களகி ரிக்கு கிளம்பினான்.
உடன், ராஜ குரு வின் பேட்டிக்கு தூது அனுப்பினான். எனினும், இரண்டு நாட்கள் ஆகும் என்று பதில் வரவே!
எப்படியும் அவரை சந்தித்து விட்டுத் தான் போகவேண்டும் என்று அவ்வூரிலேயே ஒரு சத்திரத்தில் தங்கி விட்டான்.
இப்படியாக சத்திரத்தில் தங்கிய தெனா லிராமன். அங்கும் சும்மா இல்லாமல், தனது வேடிக்கையான பேச்சை பேசி வந்தான்.
அதன் மூலமாக சாத்திரத்திற்கு வருபவர்களை எல்லாம் கவலை மறந்து சிரிக்க வைத்தான். இதன் காரணத்தால், தெனாலி ராமனைப் பார்க்க பலர் அந்த சத்திரத்திற்கு வந்தனர்.
இவ்வளவு ஏன்? இராஜ குருவை காண வருபவர்கள் கூட தென்னாலி ராமனை சந்திக்க புறப்பட்டு விட்டனர். இதனால் நாளுக்கு நாள் ராஜ குருவைக் காண வந்த கூட்டம் குறைந்து
கொண்டே போனது. இது ராஜ குரு வுக்கே விசித்திரமாகப் பட்டது. உடனே இது பற்றி விசாரிக்க, தெனாலிராமனின் கைங்கர்யம் தான் இதற்கு எல்லாம் கார ணம் என்று கேள்விப்பட்டார்.
“உடனே தெனாலி ராமனை இங்கு அழைத்து வாருங்கள்!” என்று உத் தரவு பிறப்பித்தார் ராஜகுரு. இதற்கா கத் தான் தெனாலி ராமனும் காத்துக் கிடந்தான்.
ராஜ குருவால் அனுப்பப்பட்ட ஆட்கள் உடனே தெனாலி ராமனை சத்திரத்தில் சந்தித்து விஷயத்தை கூறி னார்கள். தெனாலி ராமனும் புறப்படத் தயார் ஆனான்.
ஆனால், அவனை விட மனம் இல்லாத சத்திர வாசிகள், தங் களை விட்டு தெனாலி ராமன் எங்கும் போகக் கூடாது என்று அன்புக் கட்டளை பிறப்பித்தனர்.
எனினும் தெனாலிராமன் அவர்களிடம்,”நான் ராஜ குருவை கண்டு விட்டு உடனே திரும்பி விடுகிறேன்!” என்று வாக்கு அளித்து விட்டுப் புறப்பட் டான்.
அப்போது சத்திரத்தில் இருந்தவர்கள் தெனாலி ராமனை நிறுத்தி, அவனுக்கு விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்களை அணிந்து கொள்ள பிரத்யேகமாகத் தந்து அனுப்பி வைத்தனர்.
சத்திரத்தார் அளித்த பட்டு ஆடைகளு டன் தெனாலி ராமன் மிடுக்காக கிளம்பி ராஜ குருவை மங்களகிரியில் அவர் இடத்தில் சந்தித்தார்.
தெனாலி ராம னைப் பற்றி ஏற்கனவே அறிந்து வைத் திருந்த ராஜகுருவும் அவனுக்கு நல்ல வரவேற்பை அளித்தார். அப்பொழுது தெனாலி ராமன் எழுதி முடித்திருந்த சிவ புராணத்தை அவரது பார்வைக்கு சமர் பித்தான்.
அதனை வாங்கிப் படித்துப் பார்த்தார் ராஜகுரு, மிகவும் நேர்தியாகவே எழுதப் பட்டு இருந்தது அது! அதை படிக்க,
படிக்க தெனாலி ராமனின் கவித்துவத் தின் மீது பொறாமை வந்தது ராஜ குருவுக்கு,”ஏது! ஏது! இவன் விட்டால்…
நம்மையே இல்லாமல் செய்து விடு வான் போலவே…நம்மை விடப் பெரிய ஆளாக இருக்கிறானே!” என்று தனக் குள் சொல்லிக் கொண்டார். தனது உத டைப் பிதுக்கிக் கொண்டார்.
இருந்தும் தனது உணர்ச்சியை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அதை கட்டுப் படுத்திக் கொண்டு வேண்டும் என்றே தெனாலி ராமன் கொடுத்த சிவ புரா ணத்தில்,
“இந்த இடத்தில் இப்படி எழுதி இருக்கலாமே! அந்த இடத்தில் இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!”
என்று ஏதேதோ வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தார். அப்பாவி தெனாலி ராமனும் ராஜகுருவின் பேச்சை அப்ப டியே நம்பி தனது தவறுகளை திருத்திக் கொள்வதாகக் கூறினான்.
பின்னர், ராஜ குருவும் – தெனாலி ராம னும் வெகு நேரமாகப் பல விஷயங் களைப் பற்றி விவாதித்தனர். தெனாலி ராமனின் பேச்சு சிரிக்க மட்டும் அல்ல, ராஜ குருவையே சிந்திக்கவும் வைத்தது.
பிறகு மெது – மெதுவாக தெனாலி ராமன் முன்பு தான் பெற்ற காளி தேவியின் தரிசனத்தையும் நடந்த சம்பவத்தையும் ராஜ குருவிடம் விவரித்தான். மேலும்,
எப்படியாவது தன்னை அரண்மனைக்கு அழைத்துப் போகும் படியாக வேண்டிக் கொண்டான்.
அத்துடன் அன்றைய தினத்தில் இருந்து ராஜ குருவிடமே தங்கி விட்டான் தெனாலி ராமன். அவர் காலால் இட்ட வேலைகளை எல்லாம் தலை யால் செய்து முடித்தான்.
‘அப்படியா வது ராஜ குருவின் நன்மதிப்பு தனக்கு கிடைக்குமா?’ என்ற ஏக்கம் தான் அனைத்திற்கும் காரணமாக இருந்தது. ஆனால்,
அந்த ராஜ குருவின் என் னமோ வேறு விதமாக இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு தெனாலி ராமன் போன்ற ஒரு உதவி ஆள் வேண்டியதாக இருந்தது.
மேலும், முன்பே தெனாலி ராமன் மீது தனக்கு ஏற்பட்ட பொறா மையின் காரணமாக,”என்ன ஆனாலும் சரி! இவனை விஜயநகரத்து அரண்ம னையின் வாசலை மட்டும் மிதிக்க விடக் கூடாது.
அப்படி மிதிக்க விட்டால் தனது மதிப்பு போய்விடும். மேலும், இவனுடைய சமயோச்சித பேச்சும், குற்றமற்ற நகைச் சுவை உணர்வும் மன்னர் கிருஷ்ண தேவராயரை கவர்ந்து விடும்.
அப்படி மட் டும் நடந்து விட்டால்…நமக்கும், மன்ன ருக்கும் உள்ள பிணைப்பு போய்விடும்!” என்றெல்லாம் பல விதமாக எண்ணினார் ராஜகுரு.
அதனால் அவர் எப்போதுமே தெனாலி ராமனிடம் ஒரு வித வஞ்சகத்துடனேயே நடந்து கொண்டார். இதனை தெனாலி ராமன் அறியவில்லை.
காரணம், அவ்வ ளவு பெரிய இடத்தில் இருக்கும் ராஜ குரு பெருந்தன்மை மிக்கவராகத் தான் இருப் பார் என்பது அவன் எண்ணம்.
ராஜ குரு அரண்மனைக்கு போக வேண் டிய நாளும் வந்தது. தெனாலி ராமனும் ஆசை, ஆசையாக ராஜ குருவுடன் விஜ யநகரம் புறப்பட விருப்பம் தெரிவித்தான்.
ஆனால் வஞ்சக ராஜ குருவோ,”தெ னாலி ராமா! உன்னை அழைத்துச் செல் லாமல் நான் யாரை அழைத்துச் செல் லப் போகிறேன்.
எனினும், இப்போது விஜயநகரத்தில் சூழ்நிலை சரி இல்லை. அதை முதலில் ஒழுங்கு படுத்த வேண் டும். மேலும் பல வேலைகள் எனக்காக அங்கு காத்துக் கொண்டு இருக்கிறது.
அவற்றை எல்லாம் முடித்து விட்டு தகுந்த நேரத்தில் உனக்கு ஆள் அனுப்புகிறேன். அப்போது நீ கிளம்பி விஜயநகரம் வந்து விடு” என்றார்.
தெனாலி ராமனுக்கு ராஜகுருவின் பேச்சு தித்தித்தது. தன் ஊர் பெரியவர் களை எல்லாம் அழைத்து ராஜ குரு வுக்கு அவர்களை அறிமுகப் படுத்தி வைத்து அவர்களிடம் ராஜ குருவைப் பற்றி மிகவும் பெருமையாக பேசினான்.
அத்துடன் ராஜ குருவுக்கு பிரியா விடை கொடுத்து கிராமத்தின் எல்லை வரை யில் தானும் ஒருவனாய் அவரது பல் லக்கை சுமந்து சென்றான்.
கிராமத்து எல்லை தாண்டியவுடன் ராஜ குருவின் உத்தரவுப் படி, சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தான்.
நாட்கள் நகர்ந்து சென்றன. அரண்ம னையில் இருந்து தன்னை அழைக்க ஆள் யாரேனும் வந்துள்ளார்களா? என்று தினமும் வாசலில் சென்று பார்த்து வரு வான் தெனாலி ராமன். இப்படியே வெகு
நாட்கள் கடந்தது. ஊர் மக்களிடம் வேறு அவன் இது பற்றி சொல்லி விட்டதால், அவர்கள் நாளடைவில் இவனை ஏளன மாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
ஒருவருடம் கடந்த பிறகு, இவன் காது படவே நக்கலும், நையாண்டியுமாக பேசத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். அதி லும் சிலர் பலமாக நகைத்தபடி,”
என்ன தெனாலிராமா! உன்னை அழைத்து வர விஜயநகர அரண்மனையில் இருந்து ஆட்கள் வருவார்கள் என்றாயே! உன் விலாசம் அறியாமல் உன்னை இன்ன மும் தேடிக் கொண்டு இருக்கிறார்களா?” என்றனர்.
இன்னும் சிலர் வேறுவிதமாக,”அட தெனாலிராமா! இன்னுமா நீ ஊரில் இருக்கிறாய்? இந்நேரம் மூட்டை முடிச்சு களை கட்டி விஜயநகரம் சென்று இருக்க வேண்டுமே!” என்று கூறி சிரித்துக் கொள்வர்.
இப்படியாக எண்ணற்ற கேலிப் பேச்சு கள். ஊர் மக்கள் புண் தேடிக் கொத்தும்
காகங்களை தெனாலி ராமனின் ரணப் பட்ட மனதை மேலும், மேலும் தங்கள் ஏளன பேச்சுக்களால் காயப்படுத்தினர்.
தெனாலி ராமனின் மனதோ எண் ணாத எண்ணமெல்லாம் எண்ணியது. ஊர் மக்களிடம் இந்த விஷயத்தை நாம் ” சொல்லி இருக்கக் கூடாதோ!”
என்று கூட நினைத்து வெம்பினான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் வருடங்கள் ஆனது தான் மிச்சம்,
“ராஜ குரு நம்மை மறந்து விட்டார் போல!” என்ற முடிவுக்கு வந்த தெனாலி ராமன் கடைசியாக ஒரு நாள், தானே குடும்பத்துடன் விஜயநகரம் செல்லத் தீர்மானித்தான்.
- 21 Best Moral Stories for Kids in Tamil
- Best 21 Moral Stories in Tamil for School Students
- Best 21 Inspirational Stories in Tamil
தெனாலிராமனின் பயணம் – Tenali Raman Stories in Tamil
தெனாலி ராமன் விஜயநகரத்துக்கு செல்லத் தீர்மானித்து விட்டானே ஒழிய அவனிடம் போதுமான அளவு பணம் இல்லை. யார்,
யார் இடமோ கேட்டுப் பார்த்தான். சிலர் மட்டுமே கடனாக சில பொற்காசுகளை தந்தனர். அதுவும் கூட சொற்ப அளவு தான். வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களை எல்லாம் விற் றான்.
ஓரளவு பணம் சேர்ந்தது. இப்போ தைக்கு அது போதும். மீதியை காளி தேவி பார்த்துக் கொள்ளட்டும் என்று அவள் கோயிலுக்கு சென்று மனம் உருக வேண்டித் தன் பயணத்தை மேற்கொண் டான் தெனாலி ராமன்.
அப்போது ஊர் மக்கள் சிலரிடம், ராஜ குருவிடம் இருந்து ஓலை வந்தது போல சொல்லிக் கொண்டான். அவர்களும் தெனாலி ராமனின் உதவி எதிர்காலத்
தில் தங்களுக்கு தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் ஊர் எல்லை வரை அவ னுடன் வந்தனர். அவனை வழி அனுப்பி வைத்தனர்.
தனது குடும்பத்தாருடன் வெகு நாட் கள் நடந்து பயணம் செய்தான் தெனாலி ராமன். வழியில் இருந்தவர்களிடம் விஜ யநகரம் செல்லும் மார்க்கத்தை கேட்க அவர்களோ,”ஐயா,
விஜயநகரம் என்ன எதிர் முனையிலா இருக்கிறது. அதற்கு நீங்கள் இன்னும் பல காதம் தூரம் செல்ல வேண்டும்.
குதிரை மீது ஏறிச் சென் றாலே போக வெகு நாட்கள் ஆகும். நீங்களோ குடும்பத்துடன் நடந்து செல் கிறீர்கள்! என்னமோ போங்கள்…” என் றபடி தெனாலி ராமனின் நம்பிக்கையை குலைத்தனர்.
அன்னை காளி தன்னை கை விட மாட்டாள் என்று எண்ணியபடி நடந்த தெனாலி ராமனுக்கு வழி நெடுக ஏகப் பட்ட சவால்கள்.
சில சமயங்கள் காட்டின் வழியே செல்ல வேண்டி இருந்தது, சில சமயம் வறண்ட நிலப் பகுதியை கடக்க
வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பும், சந்தோஷமும் தெனாலி ராமனிடம் நாளுக்கு நாள் குறைந்தது.
கடைசியில் அது மறைந்தது. அதிலும் தன்னுடன் வந்த தனது மனைவி மற் றும் பிள்ளையின் கால்களை குத்திய நெருஞ்சி முற்களை பார்க்கும் போது தெனாலி ராமன் மனம் கசிந்தது.
“நாம் இப்படி அசட்டு தைரியத்துடன் புறப்பட்டு இருந்திருக்கக் கூடாது…அப்ப டியே செல்ல நேரிட்டாலும் தான் மட் டும் முதலில் சென்று பார்த்து பின்னர் விஜயங்கரத்தில் தனக்கு என்று ஒரு அந் தஸ்து கிடைத்த பிறகு மனைவி,
மக் களை அழைத்து இருக்க வேண்டும்…” என்றெல்லாம் அவனது மனம் சிந்திக் கத் தொடங்கியது. எனினும், பாதி தூரம் கடந்தாகிவிட்டது.
முன் வைத்த காலை பின் வைக்க தெனாலி ராமன் விரும் பவில்லை. தனது தோல்வியை அவ்வ ளவு சீக்கிரத்தில் அவன் ஒப்புக் கொள்ள வில்லை. காரணம் அவன் தோல்வியை தோற்கடித்துப் பழகியவன் ஆயிற்றே!
இறுதியாக தெனாலி ராமன் தனது மனைவி, மகனுடன் ஒரு காட்டுப் பகு தியில் தங்கி இருந்தான். “நாம் கஷ் டப்பட்டது போதாது என்று நம் மனை வியையும் இப்படி கஷ்டப்படுத்தி விட் டோமே!”
என்று கண் கலங்கினான். இத் தனைக்கும் அவன் மனைவி அவனை ஒரு வார்த்தை கூட குறை கூற வில்லை,
சிரித்தபடியே அவன் போன இடமெல்லாம் பின் தொடர்ந்தாள். இது அவன் வேதனையை அதிகப்படுத்தியது. காளியை மனம் உருக வேண்டினான். அவளும் கண் திறந்தாள்.
தெனாலி ராமன் தங்கிய அதே இடத் திற்கு விஜயநகரம் செல்ல இருக்கும் ஒரு வண்டிக்காரன் வந்து சேர்ந்தான்.
அவன் தனது வண்டியை அவிழ்த்து விட்டு அங்கு சற்று இளைப்பாறினான். அப்போது அங்கிருந்த தெனாலி ராமனு டன் வண்டிக்காரன் பேச்சுக் கொடுத் தான்.
தெனாலி ராமனின் நகைச்சுவை உணர்வு வண்டிக் காரனை வெகுவா கக் கவர்ந்தது. தெனாலி ராமன் செயல் கள் ஒவ்வொன்றும் வண்டிக் காரனை
மகிழ்வித்தது. இதனால் வெகு சீக்கிரத் திலேயே களைப்பு நீங்கினான் வண்டிக் காரன். அதனால் அவன் மீண்டும் வண் டியை பூட்டிக் கொண்டு புறப்படத் தயார் ஆனான்.
அப்போது தெனாலி ராமன் வண்டிக்காரனிடம்,”இந்த வண்டி எங்கு சென்று சேர இருக்கிறது?” என்று கேட்க.
“கிருஷ்ணதேவராயர் ஆளும் புகழ் பெற்ற விஜயநகரம் செல்கிறது” என்றான் வண் டிக்காரன்.
காளியின் கருணையை நினைத்தபடி, வண்டிக் காரனிடம்,”நாங்களும் தங்களு டன் விஜயநகரம் வர கருணை காட்ட முடியுமா?” என்று தெனாலிராமன் கேட் க…சம்மதித்தான் வண்டிக்காரன்.
அந்த வண்டியில் தனது குடும்பத்துடன் ஏறிக்கொண்ட தெனாலிராமன், வழிநெ டுக பல சிரிப்புக் கதைகளை கூறி வண் டிக்காரனை மிகவும் மகிழ்வித்தான்.
தன் வாழ்நாளில் அந்த வண்டிக்காரன் அவ்வ ளவு சந்தோஷமாக இருந்ததே இல்லை! தெனாலி ராமனுக்கு கைமாறாக அவன் செலவுகளையும் இவனே செய்தான். இப்படியே பல நாட்கள் கடந்து அந்த வண்டி விஜயநகரம் வந்து சேர்ந்தது.
வண்டிக்காரன் தெனாலி ராமனுக்கு தனது கையில் இருந்து கொஞ்சம் பணத்தையும் கொடுத்து உதவினான்.
“எல்லாம் காளி தேவியின் அருள்” என்று நினைத்தபடி தெனாலிராமன் விஜயநக ரத்தின் உள்ளே நடக்கத் துவங்கினான். மறுபுறம், வண்டிக்காரன் வேறு திசை பக் கம் சென்றான்.
தெனாலிராமன் தன் குடும்பத்துடன் விஜயநகரம் வந்து சேர்ந்த நேரம் அங்கு தசரா விழா அமக்களமாக கொண்டா டப் பட்டு வந்தது.
எங்கு பார்த்தா லும் மாட மாளிகைகள் கூட கோபுரங் கள் என்று செழிப்பாக இருந்தது விஜ யநகரம். பிச்சை அளிக்க முற்பட்டாலும் அதை வாங்க பிச்சைகாரர்கள் என்று அந்த ஊரில் யாரும் இல்லை.
அதிலும், குறிப்பாக விஜய நகர வீதிகளுக்கு வெற் றித் திலகம் இட்டது போல, அந்நாட்டு
அரண்மனை ஒளி மயமாக காட்சி அளித் தது. அதைக் கண்ட தெனாலி ராமன்,”இது இந்திர சபையோ!…இல்லை குபேர புரி யோ!..இப்படிப் பட்ட அரண்மனையில் நமக்கும் இடம் கிடைக்குமா?”
என்றெல் லாம் சிந்தித்தபடி பெருமூச்சு விட்டான். தெனாலி ராமனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. விஜயநகரத்தின் அழ கில் மனம் லயித்தான்.
பின்னர் நேரம் செல்வதை உணர்ந்த தெனாலிராமன், தனது மனைவியையும் மகனையும் ஒரு சத்திரத்தில் இருக்கச் சொல்லி விட்டு, அந்த ராஜ குருவின் இல்லத்தை தேடத் துவங்கினான்.
தெனாலிராமனின் அவமானம் – Tenali Raman Stories in Tamil
ராஜ குருவைப் பற்றி அந்த ஊர் மக் களிடம் விசாரித்தான் தெனாலிராமன். அவர்களோ தெனாலிராமனின் கலைப் பான முகத்தையும்.
சற்றே தூசி படிந்த ஆடைகளையும் பார்த்து விட்டு,”நீ என்ன சாதாரண ஆளாக இருக்கிறாய்? அந்த ராஜ குருவோ பெரும் செல்வந்தர். மகா ஞானி. அவரை தேடிக் கொண்டு இருக் கிறாய்?” என்று வினவினர்.
விநயம் இல்லாத தெனாலி ராமனோ,” இல்லை! ஐயா அவர் ஒரு முறை மங் களகிரிக்கு வந்த போது நல்ல பழக்கம். என்னை அவருக்கு நன்றாகத் தெரியும்” என்று பதில் அளித்தான்.
“அப்படி என்றால் சரி! அதோ தெரிகி றதே அந்த மாளிகை தான் ராஜகுருவின் வசிப்பிடம்” என்றனர்.
நன்றி மறவாத தெனாலிராமன் ஏனோ அன்று நன்றி கூட சொல்ல மறந்து ராஜகு ருவின் மாளிகையை நோக்கி ஓடினான்.
மாளிகையின் வெளிவாசலை அடைந் தான். அங்கோ, அவனைப் போல பலர் ராஜகுருவைக் காண அமர்ந்திருந் தனர்.
இருந்தும் கூட தெனாலிராமன் வாயில் காப்போனிடம் தன்னைப் பற்றிச் சொல்லி, உடனே ராஜ குருவை பார்க்க விரும்புவதாகச் செய்தி அனுப்பினான்.
அந்தச் சேவகனும் உடனுக்குடன் ஓடிச் சென்று ராஜ குருவை பார்த்து அவரி டம் தெனாலி ராமன் வந்த விஷயத்தை சொன்னான்.
“தெனாலிராமன்” என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ராஜ குரு திடுக்கிட்டுப் போனார். “இங்கும் வந்து தொலைத்து விட்டானா அந்தப் போக் கிரிப் பயல்? சரி சமாளிப்போம்!” என்று முணுமுணுத்துக் கொண்டார் அவர்.
பிறகு தனது வாயில் காப்பவனைப் பார்த் து,”யார் அது? அப்படி எந்தப் பெயரையும் எனக்குத் தெரியாதே! நான் இதுவரை யில் இந்தப் பெயரை கேள்விப் பட்டது
கூட இல்லையே! யார் வந்து என்னை கேட்டாலும் உடனே என்னிடம் கூற வந்து விடுவாயா?”என்றெல்லாம் கூறி தெனாலி ராமனை யார் என்று தெரியா தது போலவே காட்டிக் கொண்டார் ராஜ குரு.
ராஜ குருவின் ஆணைப்படி, வாயில் காப் பவன் தெனாலி ராமனிடம் வந்து,”நீங்கள் யார் என்றே ராஜ குருவுக்கு தெரியா தாமே!
என்னிடம் மேற்கொண்டு, மேற் கொண்டு பொய் சொல்லி திட்டு வாங் காமல் முதலில் புறப்படுங்கள். வெளியே போங்கள்!” என்று தெனாலி ராமனை விரட்டினான்.
தெனாலிராமனோ வாயில் காப்பவன் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யம் கலந்த கோபத்தை அடைந்தான்.
“என்ன இது ராஜ குருவாக இருந்தும் கூட இவர் இப்படி நடந்து கொள்கிறாரோ! மங்களகிரிக்கு வந்து நம்மிடம் நல்ல வித மாக நேரில் உரையாடியவர்! நம்மை அழைத்து வர ஆளை அனுப்புவதாகக்
கூறியவர்! இப்போதோ ‘நம்மை தெரி யாது’ என்கிறாரே! இவருக்குள் ஏதோ ‘வஞ்சக குணம்’ உள்ளது.”என்று எண்ணி மனம் பொருமினான் தெனாலிராமன்.
அதற்குள் அங்கு காத்துக் கொண்டு இருந்தவர்களில் யார் யாரோ உள்ளே சென்று வந்தனர். வாயில் காப்பவனோ!
தெனாலி ராமன் இன்னும் நின்று கொண்டு இருப்பதைக் கண்டு அவனை வெளியே பிடித்துத் தள்ள முயற்சி செய் தான்.
அது வரையில் தனது வாழ்நா ளில் கோபத்தின் அனுபவம் பயிலாத தெனாலிராமன் வாழ்வில் முதன் முறை யாக கோபத்தின் உச்சிக்கே சென்று விட் டான்.
அதன் விளைவு, வாயில் காப்பவனை ஒரே தள்ளு, தள்ளி விட்டு ‘வெடுக்’ என்று ராஜகுருவின் அரண்மனைக்குள் பிரவே சித்து விட்டான் தெனாலிராமன்.
அங்கு கம்பீரமாக அமர்ந்து இருந்த ராஜ குருவி டம்,”ஓ ராஜகுருவே! என்னை உங்களுக் குத் தெரியாது? மனசாட்சியை தொட் டுச் சொல்லுங்கள்! தாங்கள் மங்களகி
ரிக்கு வந்து தங்கி இருந்த சமயம் நான் தங்களுக்குப் பணிவிடை செய்ய வில் லையா? நீங்கள் சொன்ன வேலைகளை எல்லாம் செய்யவில்லையா?
என்னை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புவ தாக சொல்லி விட்டுப் போனது உங் கள் நினைவில் இல்லையா?” என்று சற்று கோபத்துடனையே கேட்டான் தெனாலி ராமன்.
“யார் நீ? சபை நாகரிகம் தெரியா மல் உள்ளே வந்து என்னையே கேள்வி கேட்கிறாய்!… இங்கிதம் தெரியாதவ னே!… வெளியே போ!”
என்று மனம் கூசா மல் மாளிகை திமிரில் பேசினார் ராஜ குரு. அது கண்டு அங்கு கூடி இருந்த வர்கள் அனைவரும் நகைத்தனர்.
அதற் குள் ராஜகுருவின் சேவகர்களுள் ஒரு வன் வந்து தெனாலி ராமனை பிடித்து வெளியே தள்ளினான். கண்கள் கலங்க மகாகாளியை நினைத்து வெதும்பினான் தெனாலி ராமன்.
பிறகு இனியும், இங்கு இருப்பது தகாது. நம் கையே நமக்கு உதவி. இனி நடக்க இருப்பதை காளி யின் அருளால் நாமே பார்த்துக் கொள்
வோம் என்று அவ்விடம் விட்டுப் புறப்பட் டான் தெனாலிராமன்.
Thank you for reading these Tenali Raman Stories in Tamil I’m sure you loved them. These stories help you, children, to learn moral values and for more information about Tenali Raman click here.