If you are searching for the best Moral Stories in Tamil then you are at the right place, Here I’m sharing with you the top moral story in Tamil which is really interesting and will help students to understand moral values.
யானையின் அடக்கம்! – Moral Stories in Tamil

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட் டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண் டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத் தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியி டம், பார்த்தாயா, அந்த யானை என் னைக் கண்டு பயந்து விட்டது! என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன் னொரு யானை, அப்படியா, நீ பயந்து விட்டாயா? என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை, நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும்.
மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றி யின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் கார
ணங்களால், நான் ஒதுங்கிக் கொண் டேன்.
Moral of the Story in Tamil- நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்த வர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
- Top 5 Tenali Raman Stories in Tamil தமிழ் கதை
- Top 17+ Moral Short Stories in Tamil
- Top 21 Motivational Stories in Tamil
சிலந்தி கற்றுத் தந்த பாடம் – Moral Stories in Tamil

ஸ்காட்லாந்தின் மன்னனாக பொறுப்பேற்றான் ராபர்ட் புரூஸ் என்ற மன்னன். இருப்பினும் கொஞ் சமும் ம்மதி இல்லை.
இங்கி மன லாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்கு மிடையே மன வேறுபாடு அதிகரித்த படி இருந்தது. இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத் தது.
புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சய மற்ற ஆட்சிப் பதவி வகித்து வர லானான். அவனுக்குப் போட்டியாக, ஜான் பாலியால் என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபடலானான்.
இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன் னன், எட்வர்டு தீர்த்து வைப்பதன் மூலம், இருநாட்டுப் பகையும் முடி வுக்கு வரும் என்று எண்ணி, அங்கு சென்றனர்.
இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்ப டுத்தினான். பேதைகளே… இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண் டும்.
மன்னனாக ஆகக் கூடாது, விட வும் மாட்டேன், என்று தன் மார்பைத் தட்டினான். புரூசுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.
தன் நாட்டை இழிவாகச் சொன்ன வனை விடக்கூடாது என்று எண்ணி யபடி, மேலும் படையெடுத்தான். இங் கிலாந்து மன்னனோ தக்க பதிலடி கொடுத்தான்.
பலமுறை போர் நடந் தது. இறுதி வரை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதோடு அல்லாமல், ஸ்காட்லாந் தில் மன்னர்கள் அமர்ந்து பதவி ஏற்கும், புனிதக்கல்லை பெயர்த்துச் சென்று லண்டன் நகரில் புதைத்தனர்.
ராபர்ட் புரூஸ் மிகுந்த துன்பத்து டன் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றை அடைந்தான். ஓரிடத்தில் ஓய் வெடுக்கலானான்.
ஒருபுறம் இருந்து தோன்றிய சூரிய ஒளியில், இவன் எதிரே சிலந்தி வலை ஒன்று தெரிந் தது. சிலந்தி வலையின் ஒரு இழை யில், சிலந்தி ஒதுங்கிக் கொண்டு இருந்தது.
அச்சிலந்தியானது அந்த இழையை எதிரே உள்ள குகையின் சுவற்றுடன் இணைத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தது.
லேசான காற்று இழையில் தொங் கிய சிலந்தி, ஊசலைப் போல் ஆடலா யிற்று. ஒரு முறையல்ல, இரு முறை யல்ல… சிலந்தி பலமுறை முயன் றது.
சிறிதும் சோர்ந்து போகவில்லை. புரூஸ், சிலந்தியை உன்னிப்பாகக் கவ னித்தான். கடைசியாக சிலந்தி தன் இழையை மறுமுனையுடன் இணைத் தது. சிறிது நேரம் நின்றுவிட்டு வலை யைப் பின்ன ஆரம்பித்தது.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த புரூஸ், அதையே தன் லட்சியமாகக் கொண்டு, துள்ளி எழுந்தான். தன் வீரர்களைத் திரட்டினான்.
30 ஆயிரம் பேர் இருக்கின்றனர். எதிரி நாட்டிலோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். இம்முறை வெல்ல
வேண்டும் என்று உறுதியுடன் அஞ்சா நெஞ்சுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து, வெற்றி பெற்றான். ஆங்கி லேயரது படைவீரர்கள் சிதறி ஓடினர்.
ராபர்ட் புரூஸ், சிலந்தியை வழிகாட் டியாகக் கொண்டே எதிரியை விரட்டி யடித்து, வரலாற்றில் முதல் இடத்தைப் பெற்றான். அவனது புகழுக்கு சிலந் தியே காரணம்.
Moral of the Tamil Story- நீதி : விடா முயற்சி வெற்றியைத் தரும்
- Best 21 Stories for Kids in Tamil
- Top 20 Positive Thinking Short Stories in Tamil
- Best 21 Bedtime Stories for Kids in Tamil
ஆமை – நத்தை – முயல் – Moral Stories in Tamil

ஒரு காட்டில் ஆமையும், நத்தை யும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது.
தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக் குறைதான் அது. ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்று கொண்டி ருந்தபோது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
முயலே நில்! என்றது ஆமை. முயல் நின்றது. நீ எப்படி இவ்வளவு வேக மாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்? என்று கேட்டது நத்தை. இது என்ன கேள்வி!
உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்! என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் கேலியாகப் பார்த்தது.
ஓஹோ! எங்களின் வேகக் குறை வுக்கு எங்கள் ஓடுதான் காரணமா? ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம்.
வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா! அனுபவித்துப் பாருங்கள்! என்றது முயல் ஆமைக்கும்,
நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுக ளைக் கழற்றிப் போட்டுவிட வேண் டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட் டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற் றும் முயற்சியைக் கைவிட்டன. சட் டென,
புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக் கிப் பாய்ந்தது. ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுக ளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர்
பிழைத்தன. ஓநாய் முயலைப் பிடித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத் தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமா னது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.
- 21 Best Moral Stories for Kids in Tamil
- Best 21 Moral Stories in Tamil for School Students
- Best 21 Inspirational Stories in Tamil
அக்பரின் வேட்டை யாடும் பழக்கம் – Moral Stories in Tamil

அக்பருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுப்போக்கு மிருகங்களை வேட் டையாடுவது. ஆனால் அவர் வேட் டையாடுவது பீர்பாலுக்குப் பிடிக்காது.
ஆகையால் அக்பர் வேட்டையாடுவதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற் றியே சிந்திப்பார்.
அக்பர் ஓர் நாள் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் வேட்டையாடுவ தற்காக காட்டை நோக்கிப் புறப்பட்டார்.
பீர்பாலையும் உடன் அழைத்துச் சென் றார். காட்டிற்குள் நுழைந்தவுடன், வீரர் களின் தாரை, தப்பட்டையை அடித்து ஒலி எழுப்பினர்.
ஒலி சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் சிதறி ஓடின. அக்ப ரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.
தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல் அடைந்த புலி வீரர்களின் மீது பாய முற் பட்டபோது, அக்பர் கையில் இருந்த ஈட் டியை புலியின் மீது எறிந்தார்.
உடனே அப்புலி உறுமிக் கொண்டே மண்ணில் சாய்ந்து மாண்டு போனது. மாலைக்குள் அக்பர் மற் றொரு புலியையும் வீரத்துடன் வேட்டை யாடிக் கொன்றார்.
வீரர்கள் அனைவ ரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனி யாக அமர்ந்து பீர்பாலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.
அக்பர், இந்த ஆந்தைக ளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்றார் பீர்பாலிடம்.
பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரி யும்! என்றார். அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்! என்றார் அக்பர்.
பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப் பெண்ணின் தந்தை! மற்றொன்று மணம கனின் தந்தை! பிரபு, அவைகள் வரதட் சிணையைப் பற்றி விவாதித்துக் கொண் டிருக்கின்றன என்றார்.
றது அதற்கு பெண்ணின் தந்தை தன் னால் இருபது காடுகள் மட்டுமே தர முடியும் என்றது. மேலும், பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால்,
மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது பிரபு. இது என்ன உளறல்? மிருகங்களே இல்லாத காடு களா?
அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது? என்றார் அக்பர்.
நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் அது அப்படிப் பேசுகிறது! என்றார் பீர்பால். நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே,
காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர் கள்.
இன்னும் அடுத்த ஆறு வாரத் தில் நீங்கள் இருபது முறை வேட் டையாடினால், மீதியுள்ள இருபது காடு களும் காலியாகிவிடும்! அந்த தைரி யத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது! என்றார் பீர்பால். தன் செய்
கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், என்னுடைய மகிழ்ச் சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன்.
இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகி றேன் என்றார் அக்பர். நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்! என்றார் அக்பர்.
சக்ரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள் அற்றக் காடுகளை வரதட்சி ணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது! என்று பீர்பால் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.
Moral of Tamil Story – நீதி : உரையாடல் மூலம் தவறை விளங்க வைத்தல்
அபசகுனம் – Moral Stories in Tamil
அக்பர் தினமும் தூங்கி எழுந்த வுடன் கண்விழித்து விநாயகர் படத்தை பார்ப்பது வழக்கம். ஒரு நாள் அக்ப ரின் அறையினுள் எதிர்பாராமல் சிப் பாய் ஒருவர் நுழைந்துவிட்டார்.
அக்பர் அந்த சிப்பாயின் முகத்தில் விழித்து விட் டார். அக்பருக்கு, சிப்பாயின் முகத்தில் விழித்த நாள் முழுவதும் பலபிரச்சனை கள் வந்தன.
தான் அந்த சிப்பாயின் முகத்தில் விழித்தது தான் இதற்குக்கார ணம் என நினைத்து அந்தச் சிப்பாயைத் தூக்கில் போடுங்கள் என உத்தரவிட் டார்.
பீர்பாலுக்கு விஷயம் தெரிந்து, மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோ கிறீர் என்று கோபமாக கேட்டார். அதற்கு இந்த சிப்பாயின் முகத்தில் விழித்ததால் இன்று நாள் முழுவதும் எனக்கு ஏகப்பட் டபிரச்சனை ஏற்பட்டது.
இந்த சிப்பாயின் முகம் மிகவும் அபசகுனமானது என்று கூறினார். அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார். அக்பர் ஏன் சிரிக்கிறாய்? என்று பீர்பாலிடம் கோபமாக கேட்டார்.
அதற்கு பீர்பால் நீங்கள் அவனுடையமுகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் ஏற்பட்டது.
ஆனால், அவன் உங்கள் முகத் தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே, அப்போ யாருடையமு கம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன் என்றார்.
அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார்.
Moral of Tamil Story – நீதி : பிரச்சனைக்கு சகுனம் மட்டுமே காரணம் கிடையாது.
அரசவை விகட கவியாக்குதல் – Moral Stories in Tamil

ஒருநாள் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண் டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற் றவர்களும் மண்டபத்தில் கூடியிருந்த னர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் வந் தவுடன் சபை கூடியது. வேறூரிலிருந்து வந்த தத்துவஞானியைப் பார்த்து விழா வைத் தொடங்கி வைத்து,
விவாத மன் றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானி இறுதியில் மாய தத்துவம் பற்றி பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார்.
தெனாலிராமன் எழுந்து நின்று. ஐயா நாம் உண்பதற்கும், உண்ப தாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல் லையா? என்றார்.
வித்தியாசம் இல்லை என்றார். அதை சோதிக்க தெனாலி ராமன் அரசரிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.
விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞா னிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூ டாது எனக் கட்டளை இட்டனர். தத் துவஞானி தன் தவறை உணர்ந்தார்.
இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி, பரிசளித்து, அன் றிலிருந்து அவரை அரசவை விகடகவி ஆக்கினார்.
அழகான குழந்தை – Moral Stories in Tamil

அக்பர், ஓர் நாள் பீர்பாலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகான வன் என்றார். அதற்கு பீர்பால், இல்லை மன்னா, உங்கள் பேரனை விட அழகான வன் இருக்கிறான்.
அக்பர் என் பேரனை விடவுமா? சாத்தியமே இல்லை என்றார். உடனே பீர்பால், அரசே என்னோடு புறப் பட்டு வாருங்கள் அவனை நான் காட்டு கிறேன் என்றார்.
அக்பரும் பீர்பாலும் மாறு வேடத் தில் நகரின் ஒதுக்குப்புறத்தில் குடி சைகள் நிரம்பிய பகுதிக்கு சென்றனர்.
அங்கே ஒரு குழந்தை மண்புழுதியில் இறங்கி விளையாடி கொண்டு இருந்தது. உடலெங்கும் மண் ஒட்டி, கிழிந்த ஆடை அணிந்து, ஒழுகும் மூக்கோடு இருந்த குழந்தையை அக்பருக்குக் காட்டி,
இது தான் உங்கள் பேரனை விட அழகான குழந்தை என்றார் பீர்பால். அக்பர் திகைத்துப் போய் இந்தக் குழந்தையா எனது பேரனை விடவும் அழகு? எனப் பீர்பாலிடம் கேட்டார். ஆம் அரசே! என்று
அக்பரிடம் சொல்லிய மறுகணமே, பீர் பால் குழந்தையைக் கிள்ளிவிட்டு மறை வாக நின்று கொண்டார்.
பீர்பால் கிள்ளியதால் வலி தாளா மல் குழந்தை சத்தமாக அழத்தொடங் கியது. குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டு குடிசையிலிருந்து குழந்தையின் தாய் ஓடிவந்து,
அழகான சந்திரன் போல் ஒளி வீசும் என் குழந்தை ஏன் அழு கின்றது… என் செல்லக்குட்டி ஏன் அழு கின்றது என்று கேட்டுக்கொண்டே குழந் தையைத் தூக்கி முத்தமிட்டு சமாதானம் செய்து கொண்டே தன் குடிசைக்குள் குழந்தையை எடுத்துச்செல்கிறாள்.
பீர் பால் அக்பரை நோக்கி பார்த்தீர்களா அரசே! கலைந்த தலைமுடி, ஒழுகும் மூக்கு, உடலெங்கும் மண்புழுதியுடன் தன் குழந்தை இருந்தாலும் அந்தத் தாய்க்கு அந்தக் குழந்தை பேரழகுதான் என்ன சொல்கிறீர்கள் என்றார்.
அக்ப ருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன் போடு பார்க்கும் பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைத்தார் பீர் பால். ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பாலைச் சிறப்பித்தார் அக்பர்.
Moral of Tamil Story – நீதி :ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அழகு.
ஆகாயத்தில் அழகிய மாளிகை – Moral Stories in Tamil

ஆகாயத்தில் அழகிய மாளிகை அக்பர் ஓர் நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பீர்பால் அவர்களே!
எனக்கு ஆகாயத் தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடி யுமா?
என்று அரசர் கேட்டார். பீர்பால், மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறு வது என்று தயங்கியபடி, முயன்றால் முடி யும் மன்னா என்றார்.
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார்.
இந்த வேலை முடியாதது என்பதை மன் னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் பீர்பால்.
பீர்பால், அரசே அதற்கான முன் னேற்பாடுகளைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகும். அதன் பின்னர் தான் கட் டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால்.
தாங் கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய் யுங்கள் என்றார் அக்பர். பீர்பால் வேடன் ஒருவனிடமிருந்து சில கிளிகளை வர வழைத்துக் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார்.
மன்னரிடம் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென் றிருப்பதாக பீர்பால் மன்னருக்கு தகவல் அனுப்பினார்.
மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந் தித்த பீர்பால் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு தேவையான ஆட்கள் அனைவரும் தயாராக உள்ளார் கள்.
அவர்களை நீங்கள் வந்து பார்வை யிட்டதும் வேலையைத் தொடங்கி விட லாம் என்றார் பீர்பால். உடனே மன்னர் பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார்.
கிளி கள் உள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர். அரசரைப் பார்த்ததும் கிளி கள், சுண்ணாம்பு கொண்டு வா! செங் கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு!
கல்லை இந்தப் பக்கம் போடு! சுண் ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது. பீர்பால் இது என்ன? என்றார்.
மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டி டம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விட லாம் என்றார் பீர்பால்.
அக்பருர் ஆகாயத்தில் மாளிகை கட்ட முடியாது என்பதை புரிந்து கொண் டார். நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத் தார்.
பீர்பால் கிளிகளுக்கு கட்டிடம் கட் டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப் பட்டு கற்றுக் கொடுத்திருப்பதை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார்.
Moral of Tamil Story – நீதி: எந்த செயலையும் செய் யும் முன் சாத்தியமாகுமா என நன்கு ஆராய்ந்து முயல வேண்டும். முடியாத தற்கு ஆசைப்படக் கூடாது.
இறைவன் அளித்த பரிசு – Moral Stories in Tamil

அக்பர் சபையில் தினமும் பீர் பாலை அரசர் பாராட்டுவதைப் பார்த்து, ஒருவர் மட்டும் பொறாமைப்பட்டார்.
இன்று எப்படியாவது பீர்பாலை மட் டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும் என்றுத் தீர்மானித்தார். அவர் சபையில் அமர்ந்துக் கொண்டு பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.
அதை பார்த்த அக்பர், தங்களின் சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். அரசர் மிகுந்த சிவப்புநிறம், சபையில் இருக்கும் மற்ற அமைச்சர்களும் சிவப்பு நிறம் கொண் டுள்ளனர்.
ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறத் தோற்றத்தில் காட்சியளிப்பதைப் பார்த்து, அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன் எனக் கூறினார்.
உடனே எழுந்த பீர்பால், இறைவன் தம் முடைய பக்தர்களுக்கு தம்முடைய பாக் கியங்களை வழங்கும் போது,
நீங்கள் எல் லோரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள். நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே காரணம் என்றார். அக்பருக்கு பீர் பால் அளித்த பதிலைக்கேட்டு மன தில் மகிழ்ச்சி தாளவில்லை.
பீர்பால் மீது பொறாமைப்பட்டவர் வெட்கித் தலை குனிந்ததோடு, பீர்பாலிடம் மன்னிப்பும் கேட்டார்.
Moral of Tamil Story – நீதி: புத்திசாலிகளிடம் மோதினால் ஆபத்து உனக்குதான்
உண்மையான குற்றவாளி – Moral Stories in Tamil

ஆக்ரா நகரக் கடைவீதியில் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள் நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வியாபாரிகளும் வாணிபம் செய்ய வந்தி ருந்தனர்.
திடீரென்று, முத்து விற்பனை செய்யும் கடையின் அருகில் ஏதோ சல சலப்பு ஏற்பட அங்கு சென்று பார்த் தால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டிலிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு,
இவன் என்னிடம் அடிமையாக இருந்தவன், நான் வெளி யூர் சென்ற சமயத்தில் என் பொருள் களை கொள்ளை அடித்து விட்டு ஓடி விட்டான்.
இவனைத் தேடாத இடம் கிடை யாது. இன்று தான் இவன் கிடைத் தான், என்று கூறினான். பிடிப்பட்ட வனோ, இவன் சொல்லுவது பொய்.
நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி. இவன் என்னிடம் அடிமையாக இருந் தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்து விட்டு ஓடி விட்டான். இவனைத் தேடாத இடம் கிடையாது.
இன்று தான் இவன் கிடைத்தான், என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான். அப்போது அவ்வழி யாக வந்த காவலர்கள் அந்த இரண்டு பேரையும் அரசவைக்கு கூட்டிச் சென்று அக்பரின் முன்னால் நிறுத்தினர்.
அவர்கள் வழக்கைக் கேட்ட அக் பருக்கு ஒன்றுமே புரியவில்லை. பீர்பால், இவர்களில் யார் சொல்வது உண்மை என்று புரிகிறதா?
என்றார் அக்பர். அரசே, இவர்களில் யார் குற்றவாளி என்று கண் டுபிடிக்க நான் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.
என் தியானம் முடியும் வரையில் இவர்கள் இருவரும், தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும், என்றார் பீர் பால்.
பீர்பால், உண்மையான குற்றவாளி தன்னை தியானத்தின் மூலம் கண்டுபி டித்து விடுவாரோ என்று அஞ்சினான்.
திடீரென்று, பீர்பால், காவலர்களை பார்த்து அந்த அடிமையின் தலையைச் சீவிவிடு, என்றார். உண்மையான குற்ற வாளி தன்னைத் தான் சொல்கிறாரோ என்று எண்ணி பதற்றத்துடன் எழுந்தான்.
பீர்பால் அக்பரை நோக்கி, இவனே உண்மையான குற்றவாளி. இந்த வெளி நாட்டவரிடம் இவன் அடிமையாக இருந்திருக்கிறான்.
அவர் ஊரில் இல் லாத சமயத்தில் அவருடைய பொருள் களை அபகரித்துக் கொண்டு நம் நாட் டுக்கு வந்து வேறு பெயரில் பெரிய வியா பாரியைப் போல் வேடமிட்டுத் திரிந்து வருகிறான், என்றார் பீர்பால்.
அக் பர் அவனிடமிருந்த பொருள்களை பறி முதல் செய்து வெளிநாட்டு வியாபா ரிக்கு கொடுத்தார். பின்பு அந்த அடி மைக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை யும் கொடுத்தார். அக்பர், பீர்பாலைப் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்.
Moral of Tamil Story – நீதி : பிறர் பொருளை அபகரிக்கக்கூ டாது.
உதைத்த காலுக்கு முத்தம் – Moral Stories in Tamil
ஓர் நாள் அக்பரின் ராஜசபை கூடி யது. அக்பர் சபையோர்களைப் பார்த்து நேற்று நள்ளிரவில் யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்துவிட்டு ஓடிவிட்டான்.
அவன் யார் எனத் தெரிந்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்டார். சபை யோர் அனைவரும் அதிர்ச்சியடைந்து ஒவ்வொருவரும் கூறிய தண்டனைகள் எல்லாமே மரண தண்டனையில் தான் முடிந்தது.
பீர்பால் மட்டும் சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த கால்க ளுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள் என் றார்.
கொலுசும், முத்தமுமா? என்ன கூறு கிறார் பீர்பால் என்று சபையோர் அனை வரும் திகைப்புடன் பீர்பாலைப் பார்த்த னர். ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்று அக்பர் கேட்டார்.
பீர்பால், மன்னா, தங்கள் படுக்கை அறைக்கு அரண்மனைக் காவலை மீறி நள்ளிரவில் நுழைந்து மார் பில் ஏறி உதைத்துவிட்டு ஓடி இருக்கிறார் என்றால்,
அது நமது குழந்தை இளவ ரசனால் மட்டும் தான் முடியும் என்றார். ஆதலால் அவருக்கு கொலுசும், முத்த மும் தானே சிறந்த பரிசாக இருக்க முடி யும் என்றார். பீர்பாலின் மதியூகத்தை எண்ணி அக்பரும், சபையில் இருந்த அனைவரும் வியந்தனர்.
Moral of Tamil Story – நீதி: நடந்த நிகழ்வை நன்கு ஆராய்ந்து பார்த்து பிறகு முடிவு எடுக்க வேண்டும்.
ஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது – Moral Stories in Tamil

பீர்பால் ஒரு நாள் பீர்பாலின் சாது ரியமான உரையாடலைக் கேட்டு பீர் பாலுக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்ப தாக அக்பர் வாக்களித்தார்.
பிறகு அக் பர் தான் கூறியதை மறந்துவிட்டார். பீர் பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக் பர் அதை நிறைவேற்றவில்லை.
பீர்பால், அக்பருக்கு தக்க படிப்பினை புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டி ருந்தார். ஓர் நாள் இருவரும் உரையா டிக்கொண்டிருக்கும் போது அக்பர்,
பீர் பால் ஏன் ஒட்டகத்தின் கழுத்து கோண லாகவும் அவலட்சணமாகவும் இருக்கி றது? என்று கேட்டார். இதுதான் தரு ணம் என்று எண்ணிய பீர்பால், அரசே..
அவை முற்பிறவியில் யாருக்காவது இல வசமாக கிராமங்களை பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக் கும் என்றார்.
பீர்பாலுக்கு தான்கொடுத்த வாக்கு அப்போதுதான் நினைவுக்கு வந் தது. அதனை புரிந்துகொண்ட அக்பர், உடனே பீர்பாலின் பெயருக்கு ஒரு கிரா மத்தை எழுதிக் கொடுத்தார்.
கடவுளும் தூது வர்களும் – Moral Stories in Tamil
ஒரு நாள் அக்பருக்கு ஒரு சந்தே கம் எழுந்தது. பீர்பாலிடம், பக்தர்களைக் காக்க உலகிற்கு கடவுள் தானே வரு வது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டார்.
பீர்பால், மன்னா, இதற்கு உடனே விடைகூற இயலாது, சற்று அவகாசம் கொடுங்கள் என்றார். அக் பர் குடும்பத்தாரோடு கங்கையில் பட கில் போய்க்கொண்டிருக்கும் போது,
ஆழமான பகுதிக்கு அருகில் படகுச் சென்றவுடன் பீர்பால், அக்பரின் பேரனை தூக்கி கங்கை நதியில் போட்டு விட்டார்.
அக்பர், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார். பீர் பாலை பார்த்து முட்டாளே! ஏன் இக்கா ரியத்தைச் செய்தாய்? என கோபமாகக் கேட்டார்.
குழந்தை தண்ணீரில் விழுந் தவுடன், தாங்கள் படைத்தளபதியாகிய என்னிடம் மற்றும் உடன் உள்ள வீரர் களை நோக்கி குழந்தையைக் காப்பாற்று என்று ஆணையிடாமல் நீங்கள் குதித் தது ஏன்? அக்பர் குழந்தையைக் காப் பாற்றுவது என் கடமை.
அதைவிடுத்து ஆணையிட்டுக் கொண்டிருப்பது சரியா? என்றார். சக் ரவர்த்தி அவர்களே, எத்தனை பேர் இருந்தாலும்,
நீங்களே குழந்தையைக் காக்க நினைத்ததுபோல தான் ஆபத்தில் இறைவனும் தானே வந்து மக்களைக் காப்பாற்றுவார் என்றார்.
அக்பருக்கடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததற்காக பீர்பாலைப் பாராட்டினார்.
காயத்ரி மந்திரம் – Moral Stories in Tamil
அக்பரும் அவருடை மதியூக மந் திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்தபோது ஒரு பிச்சைக்காரன் வந்தான்.
அவனைப் பார்த்த அக்பர், பீர்பாலிடம் இந்த இனத் தில் உள்ளவர்களுக்கு பிச்சை எடுப்பது தவிர வேறு நல்ல தொழில் எதுவும் தெரி யாதா? என்று கேட்டார்.
பீர்பால், அவனி டம் எதற்காக பிச்சை எடுக்கிறாய் என்று கேட்க, அதற்கு அவன் இதில் தினமும் 25 காசுகள் கிடைப்பதாகக் கூறினான்.
உடனே பீர்பால், நீ பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்ரி ஜபம் செய்தால் னமும் 50 காசுகள் தருவேன் என்றார்.
சரி என்று ஒப்புக் கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கலா னான். அவன் முகத்தில் புது தேஜஸ் உருவானது.
பீர்பால் மீண்டும் அவனை அழைத்து தினமும் 108 முறை ஜபம் செய்தால் 1000 காசுகள் தருவேன் என் றார்.
அவனும் அதுபடியே ஜபித்தான். ஒரு நாள் அவனுக்கு அமோகமான ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்பட் டிருப்பதைக் கண்டு தினந்தோறும் திர ளான மக்கள் அவனை வணங்கி அருள் பெற்று சென்றனர்.
ஒரு மாதம் ஆகியும், அந்த ஏழை பணம் வாங்க வரவில்லை. அதனால் பீர்பாலே அவன் வீட்டிற்கு சென்று பணம் கொடுத்தார்.
ஆனால் பணிவுடன் வாங்க மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன் மீக வழியைக் காட்டியதற்காக பீர்பா லுக்கு நன்றி தெரிவித்தான்.
மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட் டிற்கு அழைத்து வந்தார். அக்பரிடம் சில மாதங்களுக்கு முன் நீங்கள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்றார் பீர்பால்.
அக்பர் மிகவும் ஆச்சரியப்பட்டதுடன் அந்த ஏழையின் மாற்றத்திற்கான காரணம் என்ன என்று விளக்கம் கேட்டார்.
காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார். காயத்திரி மந்திர ஜபத்தி னால் பட்ட மரமும் தழைக்கும் என்றார் பீர்பால்.
Moral of Tamil Story – நீதி : பணம் இல்லாதவன் பிச் சைக்காரன் ஆகிறான். பணம் வைத் திருப்பவன் கடவுள் மீது கொண்ட பக் தியினால் பணத்தின் மேல் உள்ள ஆசை நீங்கி ஞானத்தை தேடி அடை கின்றான்.
காரணம் என்ன? – Moral Stories in Tamil
அக்பரின் அரச சபையில் அறி ஞர்களும் புலவர்களும் கூடியிருந்தார் கள். அப்போது அக்பர் திடீரென்று ஒரு கேள்வியை சபையில் கேட்டார்.
என் உள்ளங்கையில் ஏன் ரோமம் முளைக் கவில்லை? என்று கேட்டார். அக்ப ரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சபையில் உள்ளோர் திகைத்துப் போனார்கள்.
பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் பீர்பால் மன் னரிடம் சாதுர்யமாய் எதையாவது கூறி நல்ல பெயரை தட்டிச் சென்று விடு வாரே என்ற கவலை இருந்தாலும் அக் பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
சபையில் உள்ளோர் அனைவ ரும் மௌனம் சாதித்ததை கண்ட தும் அக்பர், என்ன பீர்பால் நீங்களே சொல்லுங்கள் என்றார் மன்னர்.
தங் களது பொற்கரங்களால் அனைவருக் கும் பொருளை வாரி வழங்குகிறீர்கள். தொடர்ந்து செல்வத்தை கையில் வைத் துக் கொண்டிருப்பதால் தங்களது உள் ளங்கையில் ரோமம் முளைக்கவில்லை! என்றார் பீர்பால்.
அக்பர் அத்துடன் விட வில்லை பீர்பாலிடம், உங்கள் கைகளில் ரோமம் முளைக்காததற்கான காரணம்? என்று கேட்டார்.
சற்றும் தாமதிக்கா மல் பீர்பால் ஒவ்வொரு நாளும் தங்களி டம் அன்பளிப்பை என் கைகள் பெற் றுக் கொண்டே உள்ளது அல்லவா? அத னால் என் கரங்களில் ரோமம் முளைக் காமல் உள்ளது.
பீர்பால் நம் இருவரது கைகளி லும் ரோமம் முளைக்காததற்கு காரணத் தைக் கூறிவிட்டீர்கள். ஆனால் சபை யில் உள்ள இவர்களின் கைகளில் ஏன் முளைக்கவில்லை என்று பீர்பாலைக் கண்டு பொறாமைப்படுவோரை சுட்டிக் காட்டினார்.
பாதுஷா அவர்களே ஒவ் வொரு நாளும் தாங்கள் எனக்கு அளிக் கும் பரிசுகளைப் பார்த்து, பொறாமை உணர்வால் கைகளை பிசைந்து கொண் டிருப்பதால் இவர்களின் கைகளில் ரோமம் முளைக்கவில்லை. பீர்பாலின் சாதுர்யமான பதிலைக் கேட்டு அக்பர் தன்னை மறந்து சிரித்தார்.
காவல்காரர்கள் பெற்ற பரிசு – Moral Stories in Tamil
அக்பர் ஒரு நாள் தன் சபை யில் அமர்ந்திருக்கும் பொழுது, அவரை பார்க்க ஓர் இளைஞன் வந்தான். அவன் அக்பரை பணிவுடன் வணங்கினான்.
அக்பர் அவனை நோக்கி, நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?. அரசே, என் பெயர் மகேஷ். நான் ஒரு குக்கிராமத் தில் வசிக்கின்றேன்.
நான் உங்களிடம் வேலை தேடி நான் வந்திருக்கிறேன். அக்பர், உனக்கு யார் சொன்னார்கள் இங்கே வேலை கிடைக்குமென்று?. என் ஆசிரியர்,
என் அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்க ளிடம் தான் கிடைக்கும் என்றார். அவரு டைய வார்த்தையை நம்பி என் கிராமத்தி லிருந்து வெகு தூரம் நடந்து தங்களைத் தேடி வந்து இருக்கிறேன் என்றான்.
அக் பர், மகேஷிடம், எல்லா ஆசிரியர்களும் தங்களின் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள்.
உண்மையிலேயே நீ புத்தி சாது ரியமானவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும் என்றார்.
அரசே, நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நான் நூறு மடங்கு தகுதியுடையவன் என்று கூறினான். அக்பர், அதை நிரூ பித்துக் காட்டு என்றார்.
அதற்கு, மகேஷ் மன்னா எனக்கு ஒரு பரிசு தருவீர்களா? நான் கேட்கும் பரிசுக்கு ஒரு பைசா கூட செலவாகாது என்றான்.
அக்பர் அப்படிப் பட்ட பரிசு என்ன என்று கேட்டார். முப்பது சவுக்கடி கொடுங்கள்! என்றான்.
அந்த விபரீதமான வேண்டுகோ ளைக் கேட்டு அக்பர் திடுக்கிட்டு உனக் கென்ன பைத்தியமா? என்றார். மகேஷ் அக்பரிடம், தயவு செய்து நான் வேண்டி யதைக் கொடுங்கள் என்றான்.
உடனே, அக்பர் ஒரு காவலாளியை சாட்டை யெடுத்து வரச்சொல்லி பிறகு அவன் செவிகளில் அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்! என் றார்.
மகேஷ், காவலாளியைப் பார்த்து நீ என் முதுகில் அடிக்கத் தொடங்கு! என்றான். அவனும் மெதுவாகவே அடித் தான். மகேஷ் தன் மீது பத்து சாட்டையடி முடிந்ததும் நிறுத்து என்றான்.
அக்பரை நோக்கிய மகேஷ் அரசே, பரிசில் எனக் குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக் கும் பகிர்ந்து கொடுங்கள் என்றான்.
அக்பர், என்ன உளறுகிறாய்? அவர்களை எதற்காக கூப்பிடச்சொல்கி றாய்? என்றார். அவர்களையே கூப்பிட் டுக் கேளுங்கள்.
உடனே, அக்பர் அவர் கள் இருவரையும் உள்ளே அழைத் தார். அவர்கள் வந்ததும், தோழர்களே! சக்ரவர்த்தி தரும் பரிசை நாம் மூவ ரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று நான் உங்களுக்கு வாக்களித்தேன் அல் லவா. என்னுடைய பங்கை நான் பெற் றுக்கொண்டேன். இனி, நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்றான்.
இருவரும் பரிசை எதிர்பார்த் தால், இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டை அடி விழுந்தது. இருவரும் வலி பொறுக்க முடியாமல் கதற,
அக்பர் இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்! என்று உத்தரவிட்டார். பிறகு மகேஷிடம், நீ மிகவும் சாமர்த்திய சாலி என்பதை நிரூபித்து விட்டாய்!
இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்று பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கின்றேன் என்றார்.
Moral of Tamil Story – நீதி :மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.
கிளியின் கதை – Moral Stories in Tamil
அக்பருக்கு அழகான கிளி ஒன் றைத் ஒரு துறவிப் பரிசாக கொடுத் தார். அதை பெற்றுக் கொண்ட அக் பர், ஒரு நன்றியுள்ள வேலையாளை அழைத்துக் கிளியை கொடுத்துக் கவ னமாக,
அதற்கு தேவையான ஆகாரத் தைக் கொடுத்து வளர்த்து வர வேண் டும். கிளி நோய்வாய்ப்பட்டது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என் னிடம் வந்து சொன்னால்,
நான் உனக்கு மரணதண்டனை அளிப்பேன் என்று கட் டளையிட்டார். வேலையாள் மிக கவன முடன் கிளியை வளர்த்து வந்தான்.
இந் நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு, கிளிநோய் வாய்ப்பட்டு மாண்டுவிட்டது. வேலையாள் கிளி செத்துவிட்ட செய்தி அரசருக்கு தெரிந்தால் மரணதண்டனை கிடைக்கும் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.
இதிலிருந்து தப்பிக்க மதியூக மந் திரி பீர்பாலிடம் ஓடி, அவர் காலில் விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறி னான். பயப்படாதே, நான் காப்பாற்றுகி றேன் என்று சொல்லி அனுப்பி வைத் தார்.
மறுதினம் வழக்கம்போல் அரச சபைக்குச் சென்ற பீர்பால் அரசரை வணங்கிவிட்டு, அரச பெருமானே, உங் கள் கிளி…… என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார்.
அரச பெரு மானே, உங்கள் கிளி…….. அரசர் கிளிக்கு என்ன நேர்ந்தது? என் கிளி செத்துவிட் டதா? எனப்படபடப்போடு கேட்டார். பீர் பால், அரசே தங்கள் கிளி பெரிய துறவி யைப் போலாகிவிட்டது போலும்.
முகம் வானத்தை நோக்கியுள் ளது. கண்கள் மூடியிருக்கின்றது என் றார். அக்பர் உடனே விரைந்து சென்று பார்த்தால் கிளி கூண்டுக்குள் செத்துக் கிடந்தது.
கிளி செத்துவிட்டது என்று ஏன் முன்பே சொல்லி இருக்கக்கூடாது? அது எப்படி சொல்ல முடியும்? நீங்கள் விரும் பினால் அவ்வாறு சொல்லலாம்.
ஆனால் அது பிரார்த்தனை செய்து கொண்டிருப் பதாகவே நான் கருதுகிறேன் என்றார் பீர் பால்.
சிறந்த புத்திசாலியான உம்மால் கிளி உயிரோடு இருக்கிறதா, ஒரு செத்துவிட்டதா என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியவில்லையே,
கிளி இறந் துவிட்டது என்ற முன்னரே நீர் சொல் லியிருந்தால், நான் இவ்வளவு சிரமத் தோடு இங்கே வந்திருக்க வேண்டிய தில்லை அல்லவா? என்றார் அக்பர்.
அரசர் பெருமானே, கிளி செத்துவிட் டது என்று முன்பே நான் சொல்லி இருந்தால் என் தலையை அப்பொழுதே கொய்து இருக்க மாட்டீர்களா? என்றார் பீர்பால்.
அதைக் கேட்ட அக்பர் வேலை யாளிடம் தாம் முன்பு கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார். நல்லவேளையாக,
நன்றியுள்ள அந்த வேலையாளின் தலை வெட்டப்படுவதிலிருந்து தந்திரமாக அவ னைக் காப்பாற்றிய பீர்பாலின் மதியூகத் தைப் பாராட்டினார்.
Moral of Tamil Story – நீதி: சொல்வது பெரிதல்ல எப்படிச் சொல்கிறோம் என்பது தான் முக்கி யம்.
கொடுக்கும் கை கீழே, வாங்கும் கை மேலே – Moral Stories in Tamil
அக்பர் சபையில் அமர்ந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத் திக்கொண்டிருக்கையில் ஒரு சந்தே கம் எழுந்தது.
உடனே அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந் தும் இருப்பது உண்மை.
ஆனால் தானம் கொடுக்கும் சமயத்தில் கொடுப்பவர் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? என்று கேட் டார்.
அவையில் இருந்த அமைச்சர்க ளுக்கு எவ்வளவு யோசித்தும் விடை தெரியவில்லை.
அந்த சமயத்தில் பீர்பால் சபைக்கு வந்து அமர்ந்தார். இதே கேள்வியை பீர் பாலிடமும் அக்பர் கேட்டார். அதற்கு பீர் பால்,
ஒருவர் மூக்குக்குப் பொடி போடும் போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் எனக் கேட்டால் அச் சமயத்தில் அவர் தன் கையில் இருக் கும் மூக்குப்பொடி டப்பியை அவர் முன் நீட்டுவார்.
மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவ ரின் கை சற்று மேலே இருக்கும். ஆகை யினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந் திருக்கும் என்றார்.
தன்னுடைய கேள் விக்கு உடனே பொருத்தமான பதில் அளித்த பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.
Moral of Tamil Story – நீதி: தானம் கொடுப்பவர் கை மற்றும் பெறுபவரின் கை உயர்ந்து, தாழ்ந்து இருப்பது அவரவர் கொடுக் கும் தானத்தைப்பொறுத்து மாறுபடும்.
சாதூர்யமான சிறுமி – Moral Stories in Tamil
பீர்பாலுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சாதுர் யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத் தந் தையிடம் அடம் பிடித்தாள்.
பீர்பா லும் மறுக்க முடியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
அன்றுதான் முதல் முறையாக அரசரைப் பார்த்தாள். ஆனாலும் சிறுமி மிகவும் மரியாதையோடு, அரசரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தாள்.
அக்பர் பிரியத்தோடு சிறுமியை அருகில் அழைத்து, குழந்தாய், உனக்கு ஏதேனும் சொல்லத் தெரியுமா? என விசாரித்தார். ஓ! எனக்கு நிறையவும் குறையவும் பேசத் தெரியுமே என்று கூறினாள்.
குறையவும் நிறையவும் என்றால் என்ன அர்த்தம் எனக் கேட்டார் அக் பர். பெரியோர் முன்பு குறைவாகப் பேச வேண்டும்;
சிறுவர் முன்பு நிறையப் பேச வேண்டும் என விளக்கம் கூறினாள் சிறுமி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
தந்தையைப் போல மகளும் என்று இரு வரையும் புகழ்ந்து பாராட்டியதோடு சிறு மிக்குப் பரிசுகள் தந்தார் அக்பர்.
Moral of Tamil Story – நீதி : சுருங்கச்சொல்லி விளக் கம் தருவது.
You are here it means you read our whole Moral Stories in Tamil I’m sure you would love it. To make the day for your friends and family children then you can share this blog with just one click which is hovering at the bottom of your phone. For more story, you can check this Wikipedia.