Top 17+ Moral Short Stories in Tamil | தமிழில் சிறுகதைகள் 2023

If you are searching for short stories in Tamil then you are at the right place, here I’m sharing with you the top short stories in Tamil which is really interesting and full of morals. In fact, I personally share these Tamil short stories with my family and friend’s children.

பொக்கிஷம் – Short Stories in Tamil

Short Stories in Tamil

பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் சென்று தூரத்தில் உள்ள மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பொக்கிஷம் உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான்.

உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மணலின் மீது அவன் நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.

பொக்கிஷத்தை பெற அவன் மண லைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்ட… தோண்ட… சூரியன் மேலெ ழுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது.

அவன், தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண் டது. நிழலே இல்லை.

அவன் ஏமாற் றத்தால் அழுது புலம்பினான். அப்பொ ழுது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவன் செயல் கண்டு சிரித்தார். அவன் அவரைப் பார்த்தான். அவர் கூறினார்.

இப்போதுதான் உன் நிழல். பொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைக் காண் பிக்கிறது. அது உனக்குள்ளே இருக்கி றது.

அடிமையானக் குதிரை – Short Stories in Tamil

ஒரு குதிரைக்கும், கலைமானுக் கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண் ணியக் குதிரை ஒரு மனிதனின் உத வியை நாடியது.

அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத் தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது.

தன் கடிவாளத்தை நீக் கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டி யது. குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது.

நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகை யால் உன்னை விடுவிக்கவே மாட் டேன் என்று கூறிச் சிரித்தான்.

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந் தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண் டியதாயிற்று.

Moral of Short Story in Tamil – நீதி :பிறருக்கு கேடு நினைப்ப வன் நிச்சயம் கெட்டுப்போவான்.

அழகின் ஆபத்துShort Stories in Tamil

ஒரு நாள் கலைமான் ஒன்று தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக நீர் நிலைக்கு வந்தது. நீரை அருந்தும் போது நீரில் தெரியும் தன் கொம்புகளின் நிழலைக் கண்டு பெருமிதம் அடைந்தது.

ஆஹா! என் தலையில் உள்ள கொம் புகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் என் குச்சிக் கால்கள் என் அழ கைக் கெடுக்கின்றது என்று நினைத்தது.

தன் அழகிற்கு ஏற்ற கால்கள் இல்லா ததை எண்ணி தனக்குத்தானே வருந்தி யது.

அந்த வேளையில் ஒரு சிங்கம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.

சிங்கம் துரத்திக் கொண்டே சென்றது. வேகமாக ஓடும் போது மானின் கொம்புகள் செடி, கொடி களில் மாட்டிக் கொண்டு விடவே,

மானால் வேகமாக ஓடமுடியாமல் அச் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அப் போது தான் மானிற்குப் புரிந்தது.

என்  உயிரைக் காக்க உதவும் என் கால் களைப் பழித்தேன். எனக்கு எமனாக இருந்த என் கொம்புகளை புகழ்ந்தேன்.

நன்றி மறந்த எனக்கு இது சரியான தண் டனை என்று கூறி வருந்தியபடி தன் உயிரை விட்டது.

Moral of Short Story in Tamil – நீதி:அழகு ஆபத்து.

உதவிக்குக் கிடைத்தப் பரிசுShort Stories in Tamil

ஒரு நாள் பாம்பு ஒன்று குளிர் காலப் பனியில் விரைத்து சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் அப்பாம்பிற்கு உதவ நினைத்து அப்பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற் றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியான வன் மார்பைப் பலமாகக் கடித்தது.

பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான்

. குடியான வன் அப்பாம்பைப் பார்த்து உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்த தற்கு எனக்கு மிகச்சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்றான்.

Moral of Short Story in Tamil – நீதி :கேட்காமல் செய்யும் உதவி சமயம் உனக்கே ஆபத்தை ஒரு விளைவிக்கக்கூடும்.

உயிரைக் காத்த உண்மைShort Stories in Tamil

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவ சாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங் களை வைத்தான்.

ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந் தயங்களில் மாட்டிக் கொண்டன. அவற் றைப் பிடித்த விவசாயி முதலில் முயலி டம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான்.

அதற்கு முயல் முள் ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன்.

இனி ஒருபோதும் இங்கே வரமாட் டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியி டம் கேட்டான்.

அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான்.

அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத் துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது.

மூன்றை யும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப் புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.

Moral of Short Story in Tamil – நீதி : உண்மை நிச்சயம் வெல் லும்.

உள்ளதும் போச்சுShort Stories in Tamil

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டி ருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது.

அந்த சிங் கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது.

அதே நேரத்தில் அந்த வழி யாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரி யது.

அதனால் மானை சாப்பிட ஆசைப் பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத் தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது.

தனக்கு உள்ள ஆபத்தைப் புரி கொண்டு ஓடி ஒளிந்து கொண் டது. சிங்கமானது அந்தக் கலை மானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது.

சரி முய லையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த் தால் அங்கு முயலைக் காணவில்லை.

முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்து டன் எனக்கு இதுவும் வேண்டும், இன் னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதை யும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.

Moral of Short Story in Tamil -நீதி :பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

எறும்பும் வெட் டுக்கிளியும்Short Stories in Tamil

வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத் தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட் டுக் கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற் குச் சென்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பி டம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்க ளில் மழைக்காலம் தொடங்க இருக்கி றது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது.

அதனால் அந்த நேரத்திற் குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேக ரித்து வைத்துக் கொள்கிறேன் என் றது.

வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்கா லம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது.

நாட்கள் கடந் தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அத னிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட் டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக் கிறது.

ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு.

பிறகு எறும்பு வெட் டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இரு வருக்கும் உதவியுள்ளது.

எனவே இனி மேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டி யதை சேமித்து வைத்துக்கொள் என்றது.

எறும்பானது கால நேரம் பாராது உழைத் தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக் கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தி யது.

Moral of Short Story in Tamil- நீதி :எதிர்காலத்திற்குத் தேவை யானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும் Short Stories in Tamil

ஒரு காட்டில் ஒரு தவளை யும், ஒரு சுண்டெலியும் நண்பர்க ளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தி யது.

அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித் தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந் தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத் தவரை ஆதரவுக்கு அழைத்தது.தவ ளையும் அதேபோல் தன் இனத்தவர் களை உதவிக்கு அழைத்தது.

சண்டையில் நிறைய எலிக ளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன.

பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரை யாக்கிக் கொண்டன.

Moral of Short Story in Tamil – நீதி :எளியவன் தனித்து இருந் தால் அவனை வலியவன் வெல்வது எளிது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – Short Stories in Tamil

ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிக மான தாகத்துடனும், பசியுடனும் தவித் துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது.

சிறிது தூரத்தில் ஒரு ஆட் டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண் டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது.

அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க வில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது.

ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்து டன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங் களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர் ரைக் குடிக்கிறீர்கள்.

அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. ஆறு மாதத்திற்கு முன் னால் உன் தந்தை இப்படித்தான் என்னி டம் வாயாடினார். வாயாடியதற்காக அவ ருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது.

அது போல் உன் தோலையும் உரித் தால் தான் நீ வாயாடுவதை நிறுத்து வாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய் ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந் தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள்.

நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்க ளைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத் தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது.

இப்போது நீ உன் முன்னோர் கள் செய்த கொடுமைகளுக்கு எல் லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக் குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.

Moral of Short Story in Tamil – நீதி :கெட்டவர்கள் ஒருபோதும் இரக்கப்பட மாட்டார்கள்

கழுதையின் தந்திரம் – Short Stories in Tamil

வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவ தற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட் டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது.

அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்ட போது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது.

ஓடையில் விழுந்ததால் கழு தையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று.

ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது.

வியாபாரி திரும்பிப்போய், இன் னும் கூடுதலாக உப்பைத் தனது கோணி களில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந் தான்.

ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண் டது.

எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதை யின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட் டிச் சென்றான்.

அங்கே உப்புக்கு பதி லாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத் தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.

ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ் சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.

Moral of Short Story in Tamil – நீதி :தெரிந்தே தவறு செய்யக் கூடாது

கற்றப் பாடம் – Short Stories in Tamil

கற்ற பாடம் ஒரு நாள் காட் டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென் றன.

அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது.

அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட் டளை இட்டது. அக்கழுதையோ ஏற்க னவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந் தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது.

சிங்கமோ, தனக்கு மரி யாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது.

பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ் 

வளவு பெருந்தன்மையையும், மரியாதை யையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழு தையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

Moral of Short Story in Tamil – நீதி :கெட்டவர்கள் நியாயத் திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

சிங்கமும் கரடியும் – Short Stories in Tamil

ஒரு சிங்கமும் கரடியும் சேர்ந்து ஒரு மானை வேட்டையாடிக் கொன் றன. கொன்ற மானைப் பங்கு போடுவ தில் சிங்கத்திற்கும், கரடிக்கும் இடையே பயங்கரமான சண்டை வந்தது.

வெகு நேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்துத் தரையில் சாய்ந்தன. இதனை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்து பங்கு போட வைத்திருந்த மானைத் தூக் கிக் கொண்டு ஒடியது.

சிங்கமும் கரடி யும் கீழே விழுந்தவர்கள்தான், அவர்க ளால் எழவே முடியவில்லை. நாம் இருவ ரும் இப்படி வீணாகச் சண்டை போட்டுக் கொண்டு நமக்குரிய இரையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட் டன.

Moral of Short Story in Tamil – நீதி :ஒற்றுமையே பலம்.

சேவலும் இரத் தினக்கல்லும் – Short Stories in Tamil

ஒரு சேவல் தனக்குத் தேவை யான உணவை குப்பையைக் கிள றித் தேடிக் கொண்டிருந்தது. அப் போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது.

அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவ லின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது.

உடனே சேவல் வருத்தமாக இந் தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந் திருக்கும்.

எனக்கு இந்தக் கல் கிடைத்த தைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லா தப் பொருள் என்று கூறியது சேவல்.

Moral of Short Story in Tamil – நீதி :எந்த பொருளும் ஒரு இருக்க வேண்டிய இடத்தில் இருந் தால் தான் சிறப்பு.

நன்றி கொன்ற ஓநாய்Short Stories in Tamil

ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது.

அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக் கிக் கொண்டது. வலி பொறுக்க முடியா மல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது.

அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளை யும் தருவதாக ஆசை வார்த்தை கூறி,

உதவும்படி மிகவும் கெஞ்சியது. ஓநா யின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது.

தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு… நான் தரு வதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய்.

மேலும் உன் கழுத்தைக் கடித் துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டி யடித்தது.

நன்றியில்லாத ஓநாய்க்கு உத வியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது.

Moral of Short Story in Tamil – நீதி :ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

சிரிக்க வைத் தால் பரிசுShort Stories in Tamil

ஒருநாள், அக்பர் பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய் துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப் பேன் என்றார்.

பீர்பால் பல வழிகளில் முயன்று பார்த்தார். அக்பர் சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். இறுதி யில், பீர்பால் ஒரு தந்திரம் செய்தார்.

பீர்பால் அக்பருக்கு அருகில் சென்று அவருடைய காதில், இப்பொழுது நீங்கள் சிரிக்கவில்லை என்றால் என்ன செய்வேன் தெரியுமா?

என்றவர் மன்ன ரின் காதில், நான் என் விரல்களால் உங் கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச் சத்தை உண்டாக்குவேன் என்று குசு குசு வென்று சொல்லத் தொடங்கினார்.

பீர்பால் சொன்னதைக் கேட்ட வுடனே அக்பர் சிரித்து விட்டார். பீர் பால் தனது தந்திரத்தால் சவாலில் வெற்றி பெற்றார்.

Moral of Short Story in Tamil – நீதி: வெற்றி பெறுவதற்கு முயற்சி மட் டும் போதாது தந்திரமும் வேண்டும்.

புகையிலைShort Stories in Tamil

புகையிலை புகையிலை போடும் பழக்கம் பீர்பாலுக்கு இருந்தது. மன் னர் எவ்வளவு சொல்லியும் பீர்பாலினால் புகையிலை பழக்கத்தை விட முடிய வில்லை.

மூத்த அமைச்சர் ஒருவருக்கு, பீர்பால் புகையிலை போடுவது சுத்தமாக பிடிக்கவில்லை.

இதற்காக சந்தர்ப்பம் பார்த்து, பீர்பாலை அவமானப் படுத்த வேண் டும் என்று நினைத்துக்கொண்டிருந் தார். அந்த நாளும் வந்தது.

மன்ன ரும், மூத்த அமைச்சரும் காற்றோட்ட மாக அரண்மனைத் தோட்டத்தில் உல வியவாறு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில்,

மூத்த அமைச்சர் அந்த அரண்மனைத் தோட்டத்தின் வேலியோ ரத்தில் ஒரு புகையிலைச் செடி தானாக முளைத்து இருப்பதைப் பார்த்தார்.

அப் பொழுது அந்த வழியாக வந்த கழுதை ஒன்று, புகையிலை சாப்பிட எண்ணி இலையில் வாயை வைத்தது. அதன் காரமும், மணமும் பிடிக்காமல் உண்ணா மல் சென்று விட்டது.

உடனே மூத்த அமைச்சர் சிரித் துக் கொண்டே பாருங்கள் மன்னா! பீர் பாலுக்கு பிடித்த இந்த புகையிலை கேவலம் ஒரு கழுதைக்குக்கூட பிடிக்க வில்லை என்றார்.

உடனே பீர்பால் சிரித் துக் கொண்டே, புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள். ஆனால் கழு தைக்குத்தான் புகையிலையைப் பிடிப்ப தில்லை! என்றார்.

பீர்பால் தனது வாக்கு வன்மையால் அந்த மூத்த அமைச்சரின் மூக்கை உடைத்தார்.

Moral of Short Story in Tamil – நீதி :ஒருவருக்கு பிடித்தது மற் றவருக்கும் பிடிக்க வேண்டும் என்றுக் கட்டாயம் ஒன்றும் இல்லை.

விலை உயர்ந்த பொருள் – Short Stories in Tamil

ஒரு நாள் இரவில் நகர்வலம் வருவதற்காகக் கொள்ளைக் காரனைப் போல மாறுவேடம் அணிந்து கொண்டு, அவரின் உருவத்தை கண்ணாடியில் பார்த்தார்.

அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவரை யார் என்று கண் டுபிடிக்க முடியாத அளவிற்கு வேடம் பொருத்தமாக இருந்தது.

பீர்பாலை யும் துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து பீர்பாலின் வீட்டிற்குச் சென்றார்.

பீர்பாலிடம் இதே வேடத்துடன் சென்று தான் யார் என்பதைச் சொல் லாமல் விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றிற்று.

பிறகு பீர்பாலின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்த பீர்பால் யார் என்று தெரியா மல் சிறிது தடுமாறினார்.

சற்று நிதானித் துப் பார்த்தப் பிறகு அவருக்கு வந்திருப் பது மன்னர் என்பதை புரிந்து கொண் டார். அக்பர் தன் குரலை மாற்றி,

உன்னி டம் இருக்கும் விலை உயர்ந்த பொருட் களை எல்லாம் கொடுத்து விடு இல்லா விட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பீர்பாலை மிரட்டினார்.

பீர்பால் சிரித்துக் கொண்டே மன் னர் அவர்களே! என்னிடம் விலை உயர்ந்த பொருள் என்றால் அது என் உள்ளம் தான்.

அதை ஏற்கெனவே தாங் கள் கொள்ளையிட்டு விட்டீர்கள். நீ பலே ஆளய்யா… நான் எவ்வளவோ சிரமப் பட்டு மாறுவேடம் பூண்டு வந்தாலும் ஒரே நொடியில் நீர் கண்டு பிடித்து விடுகிறீர் கள் என்று பாராட்டினார் அக்பர்.

Moral of Short Story in Tamil – நீதி : உள்ளம் தான் உயர்ந்தது.

விஷயங்கள் – Short Stories in Tamil

காஷ்மீரின் மன்னன் ஒரே மாதி ரியான மூன்று பொம்மைகளை அக்ப ருக்கு அனுப்பி வைத்தான்.

கூடவே மூன் றுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கண் டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்கிற துண்டுச் சீட்டு ஒன்றும் இணைத்திருந் தான்.

அரச சபையிலிருந்த அத்தனை பேரும் அந்த மூன்று பொம்மைகளைப் பார்த்தனர். ஒரு வித்தியாசம் கூட இல் லாமல் மூன்றும் ஒன்றாக இருப்பதாகவே தோன்றியது.

அந்த மூன்று பொம்மை களையும், அந்தக் குறிப்பையும் பீர்பாலி டம் கொடுத்தார் அக்பர். பீர்பாலும் மூன்று பொம்மைகளையும் நன்றாகப் பார்த்தார். பிறகு ஒரு குச்சி எடுத்து வரச் செய்தார்.

பொம்மைகளின் காதில் விட்டுக் காட்டினார். ஒரு பொம்மைக்கு குச்சி மறு காது வழியாக வந்தது. மற்றொன்றுக்கு வாய் வழியாக வந்தது.

மூன்றாவதுக்கு குச்சி வெளிப்படவேயில்லை. அரசே, காதில் கேட்பதையெல்லாம் பிறரிடம் சொல்லிவிடும் பொம்மை வம்புக்கார

பொம்மை. இது மிகவும் மட்டமானது. ஒரு காது வழியாக உள்ளே போகும் விஷ யத்தை மறு காது வழியாக வெளியிடும் பொம்மை அலட்சியம் கொண்ட பொறுப் பற்ற பொம்மை.

காதில் வாங்கும் விஷயத்தை மன தில் தங்க வைத்து அதிலிருந்து அனு பவத்தைப் பெறும் பொம்மை முதல் தரம் என்றார் பீர்பால்.

எல்லோரும் பொம்மையைப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை பீர்பால் கண்டு பிடித் தார்.

மேலோட்டமாகப் பார்க்கும் யாருக் கும் எந்த விஷயமும் தெரிவதில்லை. நுணுக்கமான அறிவுடையவர்களால் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

Thank you for showing interest in these short stories in Tamil. I’m sure you would love these Tamil stories which are really mind-blowing you can share with children who are under 15 year. For more Short stories you can check here.

मेरा नाम अंकित कुमार हैं, मैं एक ब्लॉगर, स्टोरी राइटर और वेब डेवलपर हु। मुझे कहानियाँ लिखना और लोगो के साथ साझा करना बहुत पसंद करता हु।